ஹீரோயின் சான்ஸ் கிடைச்சுடுச்சா? ஸ்லிமாக ஆசைப்படும் லாஸ்லியா.. போட்டோவை பாருங்க புரியும்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா உடல் எடையை குறைக்க ஜிம்மிற்கு செல்லும் போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இலங்கையை சேர்ந்த லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் சேரனை, சேரப்பா என்று அழைத்ததன் மூலம் கவினை காதலித்ததன் மூலம் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்த வரை கவினை காதலிப்பதாக கூறி அவருடன் கடலை போட்டு வந்த லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு கவினுடனான காதல் குறித்து வாயே திறக்காமல் உள்ளார்.

தமிழகத்தின் மருமகள்
இந்நிலையில் அண்மையில் பேக் டூ சென்னை தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டியிருந்தார் லாஸ்லியா. அதனை தொடர்ந்து அவரை தமிழகத்தின் மருமகளே வருக வருக என வரவேற்றனர் நெட்டிசன்கள்.

ஹேஷ்டேக் ட்ரென்ட்
மேலும் கோலிவுட் உங்களுக்காக காத்திருக்கிறது என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரென்ட் செய்தனர். இந்த ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரென்ட்டானாது.

பறக்கும் தகவல்கள்
இந்நிலையில் சென்னை வந்து சென்றது குறித்து லாஸ்லியா எந்த தகவலும் வெளியிடவில்லை. அதே நேரத்தில் அவர் புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறார் என்றும், ராஜா ராணி சீரியலின் பார்ட் 2வில் நடிக்கப் போகிறார் என்றும் தகவல்கள் றெக்கை கட்டி பறந்து வருகின்றனர்.
ஜிம்மில் இருப்பதாக..
லாஸ்லியாவின் கேரியர் குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதும் வெளிவராத நிலையில், இன்று ஒரு போட்டோ வைரலாகி இருக்கிறது. அதாவது லாஸ்லியா தனது டிவிட்டர் பக்கத்தில் ஜிம்மில் இருப்பதாக குறிப்பிட்டு ஒரு போட்டோவை ஷேர் செய்திருக்கிறார்.

ஸ்லிம்மாக ஜிம்
இதனை பார்த்த நெட்டிசன்கள் அவர் அடுத்த புராஜெக்டிற்காகதான் எடையை குறைத்து ஸ்லிம்மாக ஜிம்மிற்கு செல்கிறார் என டிவிட்டி வருகின்றனர். ஆனால் அது வெள்ளித்திரைக்காகவா அல்லது சின்னத்திரைக்காகவா என்பது தெரியவில்லை என்றும் தெரிவித்து வருகின்றனர்.
அப்டேட் கொடுங்கள்
மேலும் பலர் இதெல்லாம் போடுறீங்க கவினுடன் இருக்கும் ஒத்த போட்டோவை போட மாட்றீங்களே என வருத்தம் தெரிவித்துள்ளனர். ஏதாவது ஒரு அப்டேட் கொடுங்களேன் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











