லாஸ்லியாவின் ஸ்பெஷல் நியூஸ்.. சிருஷ்டியின் செக்.. அபிராமியின் பார்வை.. யாரு மேல தெரியுமா?

Recommended Video

Losliya Shocking Tweet | Kavin Losliya Break Up | Rai laxmi into Web

சென்னை: நடிகர் ஆரி அர்ஜுனா தனது 34வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

ஆரி அர்ஜுனாவுக்கு பிக்பாஸ் பிரபலங்களான லாஸ்லியா, அபிராமி மற்றும் நடிகை சிருஷ்டி டாங்கே ஸ்பெஷல் பிறந்த நாள் வாழ்த்துக்களை வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை லாஸ்லியா ஆரி அர்ஜுனாவுக்கு ஜோடியாகவும், ப்ரெண்ட்ஷிப் படத்திலும் நடிக்க உள்ளார்.

ஹேப்பி பர்த்டே

ஹேப்பி பர்த்டே

நெடுஞ்சாலை, நாகேஷ் திரையரங்கம், மாயா, மாலை பொழுதின் மயக்கத்திலே உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஆரி, சமீபத்தில் தனது பெயரை ஆரி அர்ஜுனா என நியூமராலஜி படி மாற்றிக் கொண்டார். 1986ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி பிறந்த ஆரி, இன்று தனது 34வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

பர்த்டே ஸ்பெஷல்

பர்த்டே ஸ்பெஷல்

ஆரி அர்ஜுனா அடுத்ததாக நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருடன் பிக்பாஸ் லாஸ்லியா, அபிராமி மற்றும் நடிகை சிருஷ்டி டாங்கே நடித்து வருகின்றனர். ஆரி அர்ஜுனாவின் பிறந்த நாளை முன்னிட்டு, படக்குழு புதிய பர்த்டே ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், விரைவில் ஆரி அர்ஜுனா படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது.

லாஸ்லியா நியூஸ்

அந்த பர்த்டே ஸ்பெஷல் வீடியோவில், பிக்பாஸ் குரலில், "லாஸ்லியா நீங்க நியூஸ் வாசிச்சு ஸ்ரீலங்காவே கேட்டாச்சு, நீங்க பிக்பாஸ் வந்ததுக்கு அப்புறம் உங்க நியூஸ தமிழ்நாடே பரபரப்பா பார்த்தாச்சு, இப்ப என்ன ஸ்பெஷல் நியூஸ்" என கேட்க, அதற்கு லாஸ்லியா, "ஒரு பிரேக்கிங் நியூஸ், அதுவும் என்னோட படத்தை பத்தின பிரேக்கிங் நியூஸ்" என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

சிருஷ்டி செக்

சிருஷ்டி செக்

லாஸ்லியாவை தொடர்ந்து, "சிருஷ்டி, போன படத்துல ராஜாவுக்கு செக் வச்சீங்க, இந்த படத்துல யாருக்கு செக் வைக்கப் போறீங்க" என அதே பிக்பாஸ் குரல் கேட்க, சற்று யோசித்தவாறு நடிகை சிருஷ்டி டாங்கே, "ம்ம்.. ஆரிக்கு இந்த படத்துல செக் வைக்கப் போறேன்" என புன்னகைக்கிறார்.

நேர்கொண்ட பார்வை

நேர்கொண்ட பார்வை

பிக்பாஸ் லாஸ்லியா மற்றும் சிருஷ்டி டாங்கேவை தொடர்ந்து, "அபிராமி நேர்கொண்ட பார்வை படத்துல இருந்து உங்களோட அடுத்த பார்வை எங்கேன்னு சொல்றீங்களா" என அந்த குரல் கேட்க, எங்க.. இங்க.. ஆரியோட படத்துல.. என சொல்கிறார். அத்துடன் ஹேப்பி பர்த்டே ஆரி அர்ஜுனா என தயாரிப்பு நிறுவனமான சந்திரா மீடியா விஷன் தயாரிப்பு நிறுவனம் வாழ்த்து கார்டை போட்டுள்ளது.

பிரெண்ட்ஷிப்

ஜான் பால் ராஜ் இயக்கத்தில் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்க உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் லாஸ்லியாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது. விரைவில் கவினுடன் ஒரு படத்தில் நடிப்பாரா என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X