புதிய அவதாரம் எடுத்த பிக் பாஸ் லாஸ்லியா.. தீயாய் பரவும் புகைப்படத்தை பார்த்து வியந்து போன ஆர்மி!
சென்னை: இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த நடிகை லாஸ்லியா, பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நடிகை லாஸ்லியா 4 படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை லாஸ்லியா பாடகியாக புதிய அவதாரம் எடுத்து இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

செய்திகள் வாசிப்பது
இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்கிற தனது சிறு வயது கனவை கடும் முயற்சியால் சாதித்துக் காட்டினார். லாஸ்லியா செய்திகளை வாசிப்பதை பார்க்கவே ஒரு கூட்டம் செய்தி சேனல் பக்கம் ரிமோட்டை மாற்றும் அளவுக்கு அங்கே பிரபலமானார்.

ஆர்மியே ஆரம்பம்
நடிகை ஓவியா பிக் பாஸில் கலந்து கொண்டு தனது ரியல் கேரக்டரை வெளிப்படுத்த அவருக்கு ஆர்மி ஆரம்பித்த பிக் பாஸ் ரசிகர்கள் பிக் பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்ட லாஸ்லியாவுக்கும் மிகப்பெரிய ஆர்மியை உருவாக்கி தங்கள் அன்பை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.

4 படங்கள்
நடிகை லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், இன்னமும் அவரது ஒரு படம் கூட திரைக்கு வரவில்லை. ஆனால், அதற்குள் ஒன்றுக்கு நான்கு படங்களில் நடித்து கலக்கி வருகிறார் லாஸ்லியா. ஹர்பஜன் சிங் உடன் பிரண்ட்ஷிப், ஆரியுடன் ஒரு படம், தர்ஷன் உடன் கூகுள் குட்டப்பன் மற்றும் ஆக்சஸ் மீடியா தயாரிப்பில் ஒரு படம் என கோலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கிறார்.

க்யூட்டான போட்டோக்கள்
சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வரும் நடிகை லாஸ்லியா மரியநேசன் அடிக்கடி க்யூட்டான போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். சேலையில் அழகாகவும், மாடர்ன் உடையில் க்யூட்டாகவும் அசத்துகிறார்.

புதிய அவதாரம்
பிரண்ட்ஷிப் படத்தில் இடம்பெற்றுள்ள அடிச்சி பறக்கவிடுவோம் பாடலுக்கு குரல் கொடுத்து நடிகை லாஸ்லியா தற்போது பாடகியாக புதிய அவதாரத்தையும் எடுத்துள்ளார். உங்களுக்குள் இன்னும் என்னவெல்லாம் திறமை இருக்கோ தெரியலையே லாஸ்லியா என பலரும் அவரது பாடல் கேட்டு பாராட்டி வருகின்றனர்.
தேவாவுடன் இணைந்து
தேனிசை தென்றல் தேவாவுடன் இணைந்து பிரண்ட்ஷிப் படத்தில் இடம்பெற்றுள்ள அடிச்சி பறக்கவிடுவோம் பாடலை நடிகை லாஸ்லியா மரியநேசன் பாடியுள்ளார். அந்த பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











