twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மை கேம் சேஞ்சர்.. கவின் குறித்து லாஸ்லியா போட்ட டிவிட்ட பாத்தீங்களா?!

    |

    Recommended Video

    திருமணம் குறித்த முக்கிய தகவலை கூறிய லாஸ்லியா | losliya interview about her marriage

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியா பதிவிட்ட டிவிட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    விஜய் டிவியில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான லாஸ்லியா கலந்துகொண்டார். இவர் அந்நாட்டில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்து வருகிறார்.

    இரண்டாவது காதல்

    இரண்டாவது காதல்

    லாஸ்லியாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவினும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவுக்கு அது முதல் காதல் என்றாலும் கவினுக்கு பிக்பாஸ் வீட்டில் வந்த இரண்டாவது காதல் அது.

    லாஸ்லியாவுடன் காதல்

    லாஸ்லியாவுடன் காதல்

    முதலில் கவின் சக போட்டியாளரான சாக்ஷியை காதலித்தார். ஆனால் லாஸ்லியாவும் தன்னை காதலிப்பதை அறிந்த கவின் சாக்ஷியை கழட்டிவிட்டு லாஸ்லியாவை காதலிக்க தொடங்கினார்.

    தீவிர காதல்

    தீவிர காதல்

    அவர்களின் தீவிர காதல், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மைக்கில் உள்ள

    பேட்டரியை கழட்டி வைத்துவிட்டு பேசும் அளவுக்கு இருந்தது. கவினுடனான காதலால் தனது பெயரை பெரிதும் கெடுத்துக்கொண்டார் லாஸ்லியா.

    கண்டித்த பெற்றோர்

    கண்டித்த பெற்றோர்

    பிக்பாஸ் வீட்டிற்கு வந்த லாஸ்லியாவின் பெற்றோர் கவினுடனான காதலை எதிர்த்தனர். விளையாட்டை விளையாட்டாக பார்த்துவிட்டு வீட்டிற்கு வரவேண்டும் என கண்டித்தனர். ஆனாலும் அதையெல்லாம் லாஸ்லியா காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. கவினுடனான காதல் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

    கேம் சேஞ்சர் விருது

    கேம் சேஞ்சர் விருது

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவின் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறிய போது கூட, நானும் வெளியே செல்கிறேன் என கண்ணீர்விட்டார் லாஸ்லியா. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிக்பாஸ் ஃபைனலின் போது கவினுக்கு கேம் சேஞ்சர் விருது கொடுக்கப்பட்டது.

    மை கேம் சேஞ்சர்

    இந்நிலையில் மீண்டும் பழையபடி டிவிட்டருக்கு வந்துள்ள லாஸ்லியா, டிவிட்டியுள்ளார். அதில் பிக்பாஸ் சீசன் 3யில் டேக் லைனான எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. நிறைய நன்றி.. விஜய் டிவிக்கும் கமல்ஹாசன் சாருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் #mygamechanger #100days என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டிருக்கிறார் லாஸ்லியா.

    ரீடிவிட்

    ரீடிவிட்

    தனது காதலனான கவினுக்கு கேம் சேஞ்சர் விருது கொடுக்கப்பட்ட நிலையில் மை கேம் சேஞ்சர் என தன்னுடைய கவின் என இன்டைரக்ட்டாக டிவிட்டியுள்ளார் லாஸ்லியா. அவரது இந்த டிட்விட்டை பார்த்த நெட்டிசன்கள் அதனை ரீடிவிட் செய்து வருகின்றனர்.

    நெஞ்சை தொட்டுவிட்டது

    மற்றொரு டிவிட்டில் இவ்வளவு அன்பை எதிர்பார்க்கவில்லை.. உண்மையிலேயே உங்களுடைய அன்பான மெஸேஜ்கள் நெஞ்சை தொட்டுவிட்டது. என் நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி.. என பதிவிட்டிருக்கிறார் லாஸ்லியா.

    English summary
    Losliya has tweeted about Kavin. She mentioned Kavin indirectly as mygame changer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X