காதில் பூ சொருகிய லாஸ்லியா... இப்டி செஞ்சா தினமும் மிராக்கல் நடக்குமாமே!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் லாஸ்லியா.

உலகம் முழுவதும் எக்கச்சக்கமான ரசிகர்களைக் கொண்ட இவர் இப்போது தமிழில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பிரெண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பன் ஆகிய படங்களில் நடித்து வரும் லாஸ்லியா காதில் பூ சொருகி மிராக்கல் தினமும் நடக்கும் என கூறி உள்ளார்.

ரசிகர்கள் மனதில் ஆழமாக

ரசிகர்கள் மனதில் ஆழமாக

பிக் பாஸ் சீசன் 3 இல் அதிரடியாக வந்து இறங்கிய இலங்கை குயின் லாஸ்லியா நிகழ்ச்சியில் அதிகமாக கவனிக்கப்பட்ட பெண் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர். அழகில் மட்டும் அல்லாமல் தான் நினைத்ததை நேரடியாக பேசி ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்த இவருக்கு இப்பொழுது உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.

பிரண்ட்ஷிப்

பிரண்ட்ஷிப்

பிக்பாஸில் டைட்டில் வின்னராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதி வரை சென்று வெளியேறினார். இப்பொழுது சில திரைப்படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அந்த வகையில் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் லாஸ்லியா உடன் கிரிகெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் அறிமுகமாகிறார்.

லீட் ரோலில்

லீட் ரோலில்

மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஆன்ராய்ட் குஞ்சப்பன் தமிழில் கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இதனை கே எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனர்கள் இயக்க தர்ஷன் மற்றும் லாஸ்லியா லீட் ரோலில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு பெரும்பான்மையான காட்சிகள் முடிக்கப்பட்டன. மனோபாலா,யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார் என பலர் இதில் நடிக்கின்றனர்.

மிராக்கல் ஒவ்வொருநாளும் நடக்கிறது

மிராக்கல் ஒவ்வொருநாளும் நடக்கிறது

சமூக வலைத்தளங்களில் பல அழகான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்று வரும் லாஸ்லியா இப்பொழுது காதில் செம்பருத்திப்பூவை செருகிக்கொண்டு மிராக்கல் ஒவ்வொருநாளும் நடக்கிறது என கூறியிருக்க ஒருவேளை அடுத்த படத்தைப் பற்றி சொல்கிறாரோ என்னவோ என ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X