Exclusive: பிக் பாஸ் 3 டைட்டில் வின்னர் நிச்சயம் லாஸ்லியா தான்.. : அடித்துச் சொல்லும் நடிகர் சதீஷ்
பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலை லாஸ்லியா தான் பெறுவார் எனக் கூறுகிறார் நடிகர் சதீஷ்.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலை லாஸ்லியா தான் வாங்குவார் என காமெடி நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது சீசனில் கோட்டைவிட்டதை இந்த சீசனில் எப்படியும் பிடித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது பிக் பாஸ் டீம். இதனால் நாளுக்கு நாள் பரபரப்பை கூட்டிக்கொண்டே போகிறார்கள்.
ஊரெங்கும் பிக் பாஸ் பற்றித் தான் பேச்சாக இருக்கிறது. டிவிட்டர், பேஸ்புக் என சமூக வலைதளங்களை திறந்தாலே பிக் பாஸ் பற்றிய செய்திகள் தான் முதலில் கண்ணில் படுகிறது. சினிமா பிரபலங்களும் அதை பற்றி தான் டிவீட் போடுகிறார்கள்.
அப்படி நாள்தோறும் பிக் பாஸ் பற்றி டிவீட் போட்டுக்கொண்டிருக்கிறார் காமெடி நடிகர் சதீஷ். 'என்ன பாஸ் பிக் பாஸ் பத்தியே பேசிட்டு இருக்கீங்க' என சதீஷை சந்தித்து ஜாலியாக சேட் செய்ததில் இருந்து...

லாஸ்லியா ஆர்மி கேப்டன்
லாஸ்லியா ஆர்மிக்கு நீங்க தான் கேப்டன்னு கேள்விப்பட்டோமே...
அப்டி எல்லாம் இல்லங்க. ஏதோ மக்களுக்கு பிடிச்சிருக்கேன்னு சும்மா அப்பப்போ வீடியோ போடுறது தான். எனக்கு எப்பவுமே பிடிச்சது இந்தியன் ஆர்மி தான். லாஸ்லியா தான் பிக் பாஸ் டைட்டில் வின் பண்ணுவாங்க என்பது மக்களின் எண்ணம். என்னோட விருப்பமும் அது தான்.

கவினை செம கலாய்
கவினை செமையா கலாய்ச்சு டிவீட் போட்டிங்களே, அவருகூட ஏற்கனவே ஏதாவது பஞ்சாயத்து இருக்குதோ?
அய்யோ அப்டி எல்லாம் ஒரு பிரச்சினையும் பஞ்சாயத்தும் இல்லங்க. கவின் எனக்கு நல்ல நண்பர் தான். பிக் பாஸ் வீட்ல அவரு அதிகமா இருக்கிறது பாத்ரூம்ல தான். அதனால தான், சும்மா ஒரு சர்வே மாதிரி பிக் பாஸ் வீட்டில் பாத்ரூமில் அதிக நேரம் இருப்பது யார்? பேஸ்ட், பிரஷ், கவின் அப்டின்னு ஒரு டிவீட் போட்டேன். நிறைய பேர் கவின்னு தான் சொன்னாங்க. இது சும்மா ஒரு ஃபன்னுக்காக மட்டும் தான்.

பிக் பாசில் சதீஷ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்க கேட்டா நீங்க போவீங்களா?
நிச்சயமா நான் போகமாட்டேன். ஏன்னா அதுக்கு நிறைய தைரியம் வேணும். எந்த ஒரு மனிஷனாலேயும் 24 மணி நேரமும் நடிச்சுக்கிட்டே இருக்க முடியாது. எப்படியும் ஒரு சந்தர்ப்பத்துல நம்ம உண்மையான கேரக்டர் வெளியே வந்துடும். அது மக்களுக்கு பிடிக்கணும்னு அவசியம் இல்ல. அதனால நம்ம மேல கெட்ட இமேஜ் வரத்துக்கு அதிக வாய்ப்பிருக்கு. சோ நான் பிக் பாஸ்க்கு நோ சொல்லிடுவேன்.

ரொம்ப ஆக்டிவ்
சமூக வலைதளங்களில் ரொம்ப ஆக்டிவா இருக்கீங்களே, ஏதாவது வருங்கால திட்டம் இருக்கோ?
படப்பிடிப்பு இடைவெளியில் மனசுக்கு தோன்றுவதை அப்படியே வீடியோவா எடுத்து பதிவிட்டுட்டு வரேன். நல்லா வந்தா டிவிட்டர்ல போடுவேன். இல்லைன்னா டெலிட் பண்ணிடுவேன். அந்த மாதிரி டெலிட் பண்ணிய வீடியோக்கள் நிறைய இருக்கு. மக்களோடு எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக தான் சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருக்கேன்


Click it and Unblock the Notifications











