இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் உனக்காக காத்திருக்கு... சிம்புவிற்கு நம்பிக்கை கொடுத்த யுவன்
சென்னை : நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
இருவரும் இணைந்து தற்போது மாநாடு படத்திற்காக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இருவரின் சமீபத்திய புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டு சிம்புவிற்கு யுவன் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

சிறப்பான பாடல்கள்
நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இருவரும் திரையுலகில் சிறந்த நண்பர்களாக விளங்கி வருகின்றனர். இவர்களது கூட்டணியில் பல்வேறு சிறப்பான பாடல்கள் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்துள்ளன. தற்போது இருவரும் இணைந்து மாநாடு படத்தில் பணியாற்றி வருகின்றனர்.

பாடல் வெளியீடு
இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பாடல் என வெளியாகி ரசிகர்களின் ஆதரவை அதிகமான அளவில் பெற்றுள்ளது. கடந்த வாரத்தில் வெளியான லிரிக் வீடியோ பாடல் மிகவும் சிறப்பாக இருந்தது. திருமண கொண்டாட்டத்தை மையமாக கொண்டு இந்த பாடல் உருவாக்கப்பட்டிருந்தது.

யுவன் வெளியிட்ட பாடல்
இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். முன்னதாக பாடலின் டீசரையும் வெளியிட்டார். ரசிகர்களின் கொண்டாட்டத்திற்குரிய பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. சிம்புவிற்கு இசையமைப்பது என்றாலே யுவன் குஷியாகிவிடுவார். பாடல்கள் சிறப்பாக அமைந்துவிடும்.

வந்து கொண்டிருப்பதாக யுவன் ட்வீட்
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்புவுடன் தான் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள யுவன்சங்கர் ராஜா, அவருக்கு இன்னும் அதிகமான நல்ல செய்திகள் வந்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அல்லாவின் நல்ல ஆசிகளால் இது நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











