ஆஸ்கர் நாயகனே.. தேசிய விருது நாயகனே.. விருமன் ஆடியோ வெளியீட்டில் சூர்யாவிற்கு ரசிகர்கள் கட்அவுட்!
சென்னை : நடிகர் கார்த்தி, அதிதீ ஷங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் விருமன்.
சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஆகஸ்ட் 12ம் தேதி இந்தப் படம் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

விருமன் படம்
நடிகர் கார்த்தி, அதிதீ ஷங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது விருமன். முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கிராமத்து கெட்டப்பில் கார்த்தி நடித்துள்ளார். முன்னதாக கடைக்குட்டி சிங்கம் படத்தில் இதேபோல கிராமத்து கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

சூர்யா தயாரிப்பு
விருமன் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்துள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாக இருந்த விருமன் படம் தற்போது வரும் 12ம் தேதி ரிலீசாக உள்ளது. இதையொட்டி இன்றைய தினம் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அடுத்தடுத்த பாடல்கள்
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் கஞ்சாப்பூ கண்ணாலே என்ற பாடல் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது மதுரை வீரன் பாடலும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின்மூலம் டைரக்டர் முத்தையாவுடன் கார்த்தி இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.

இரண்டாவது முறையாக கூட்டணி
முன்னதாக கடந்த 2015ல் வெளியான கொம்பன் என்ற படத்தில் இந்தக் கூட்டணி இணைந்திருந்தது. அந்தப் படத்தில் கார்த்திக்கு லஷ்மி மேனன் ஜோடியாகியிருந்தார். ராஜ்கிரண் பவர்புல்லான கேரக்டரில் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் விருமன் படம் மூலம் இணைந்துள்ளது.

ஆகஸ்ட் 12ல் ரிலீஸ்
வரும் 12ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில், இன்றைய தினம் மதுரையில் இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெயீட்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதையொட்டி விழா நடைபெறும் அரங்கிற்கு வெளியில் ஏராளமான பேனர்களை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

சூர்யாவிற்கு ஏராளமான பேனர்கள்
இந்த பேனர்கள் சூர்யாவிற்காக வைக்கப்பட்டுள்ளது. அதில் ஆஸ்கர் நாயகனே, தேசிய விருது நாயகனே என அவருக்கு அடைமொழி வைத்து தங்களது அன்பை ரசிகர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். சமீபத்தில் சூரரைப் போற்று படத்திற்காக சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











