சுஷாந்த் சிங் மரணம்.. கரண் ஜோஹர், ஆலியா பட், சோனம் கபூருக்கு இப்படியொரு பாடம் புகட்டிய ரசிகர்கள்!

மும்பை: கரண் ஜோஹர், ஆலியா பட் மற்றும் சோனம் கபூர் உள்ளிட்டோர் தான் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு காரணம் என பாலிவுட் ரசிகர்கள் முடிவு கட்டி வருகின்றனர்.

Recommended Video

Sushant Singh Rajput's 5 Diaries Recovered | கிலியில் பாலிவுட்டின் பெரும் தலைகள்

ஜூன் 14ம் தேதி கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், கண்டெடுக்கப்பட்டார் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

காதல் தோல்வி காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாலிவுட்டில் நிலவி வரும் நெபோடிசம் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கொதித்துப் போன ரசிகர்கள்

கொதித்துப் போன ரசிகர்கள்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு பாலிவுட்டில் மில்லியன் கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர். பாலிவுட்டில் நிலவி வரும் அராஜக சினிமா போக்குத் தான் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கு காரணம் என்றும், சல்மான் கான், கரண் ஜோஹர், ஆலியா பட், சோனம் கபூர் உள்ளிட்டோர் மீது ரசிகர்கள் தங்களின் வெறுப்பை காட்ட துவங்கி உள்ளனர்.

காதலியிடம் விசாரணை

காதலியிடம் விசாரணை

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்கரபோர்த்தியிடம் போலீசார் 11 மணிநேரத்துக்கும் மேல் கிடுக்கிப்பிடி விசாரணையையும் நடத்தினர். இருவருக்கும் சண்டை நடந்ததையும் விசாரணையின் முடிவில் ரியா சக்கரபோர்த்தி ஒப்புக் கொண்டார். காதல் விவகாரமா? அல்லது நெபோடிசம் பிரச்சனையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

7.5 லட்சம் பேர் கோபம்

7.5 லட்சம் பேர் கோபம்

கரண் ஜோஹர் நடத்திய காபி வித் கரண் நிகழ்ச்சியில், நடிகைகள் சோனம் கபூர் மற்றும் ஆலியா பட், சுஷாந்த் சிங் என்றால் யார் என்றே தெரியாது என்று கலாய்த்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், வாரிசு ரீதியில் நடிகையாக மாறியுள்ள ஆலியா பட், எப்படி சுஷாந்த் சிங்கை பரிகாசம் செய்யலாம் என அவரை பின் தொடர்ந்த 7.5 லட்சம் இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் ஒரே நாளில் அவரை அன்ஃபாலோ செய்துள்ளனர்.

சோனம் கபூரை வெறுக்கும் ரசிகர்கள்

சோனம் கபூரை வெறுக்கும் ரசிகர்கள்

பாலிவுட்டின் பிரபல நடிகரான அனில் கபூரின் மகளான சோனம் கபூர், சர்வ சாதாரணமாக எந்தவொரு கஷ்டமும் இல்லாமல் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி விட்டார் என்றும், நெபோடிசம் காரணமாகவே அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன என பாலிவுட் ரசிகர்கள் அவர் மீது, குற்றம் சுமத்தி வருகின்றனர். ஆலியா பட்டை தொடர்ந்து சுமார் 1.7 லட்சம் ரசிகர்கள் சோனம் கபூர் இன்ஸ்டா பக்கத்தை அன்ஃபாலோ செய்துள்ளனர்.

இவர் தான் காரணம்

இவர் தான் காரணம்

கடந்த 2 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 7 படங்களில் ஒப்பந்தம் செய்யப்படாமல் சுஷாந்த் சிங் பாலிவுட்டில் புறக்கணிக்கப்பட்டதற்கு தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தான் முழு காரணம் என்று ஒட்டுமொத்த பாலிவுட் ரசிகர்களும் இவர் மீது குற்றச்சாட்டுக்களை எழுப்பியது மட்டுமின்றி, வழக்கறிஞர் ஒருவர் முசாபர் நகர நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். 3.3 லட்சம் ரசிகர்கள் கரண் ஜோஹரை பின் தொடர்வதை நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X