“பாலிவுட்டில் நிறைய வாய்ப்புகள் வந்தன”: அசால்ட்டாக டீல் செய்த சூர்யா பட நாயகி, இப்பவே இப்படியா?

ஐதராபாத்: தெலுங்கில் 'உப்பெனா' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் கிரித்தி ஷெட்டி.

உப்பெனா வெற்றியைத் தொடர்ந்து 'ஷியாம் சிங்கா ராய்', 'பங்கர்ராஜு', 'தி வாரியர்'படங்களில் நடித்து புகழ்ப் பெற்றார்.

சூர்யாவுடன் 'வணங்கான்' படத்தில் நடித்து வரும் கிரித்தி ஷெட்டி பாலிவுட் பட வாய்ப்புகள் குறித்து பேசியுள்ளார்.

டோலிவுட்டின் அழகிய லைலா

டோலிவுட்டின் அழகிய லைலா

தெலுங்கில் வில்லனாக விஜய் சேதுபதி என்ட்ரி கொடுத்த 'உப்பெனா' படம், மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. முக்கியமாக இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமான கிருத்தி ஷெட்டி, அழகிய லைலாவக டோலிவுட் ரசிகர்களை கிறங்கடித்தார். இளைஞர்கள் பலரும் கிரித்தி ஷெட்டியின் ஜுரத்தால், பல நாட்களுக்கு மயங்கிதான் கிடந்தனர்.

டோலிவுட்டின் புதிய கனவுக் கன்னி

டோலிவுட்டின் புதிய கனவுக் கன்னி

முதல் படத்திலேயே ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வரத் தொடங்கிய கிரித்தி ஷெட்டி, அடுத்ததாக நானியுடன் 'ஷியாம் சிங்கா ராய்'படத்தில் நடித்து கவனம் பெற்றார். தொடர்ந்து 'பங்கர்ராஜு', லிங்குசாமி இயக்கத்தில் 'தி வாரியர்' என தரமான படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவின் மார்க்கெட்டையும் வளைத்துப் போட்டார்.

தமிழிலும் சிறப்பான அறிமுகம்

தமிழிலும் சிறப்பான அறிமுகம்

லிங்குசாமி இயக்கிய 'தி வாரியர்' படம், தெலுங்கு, தமிழ் என இருமொழிகளிலும் வெளியானதால், கோலிவுட் ரசிகர்களிடம் கிரித்தி ஷெட்டிக்கு வரவேற்பு கிடைத்தது. 'புல்லட்' பாடலில் கிரித்தி ஷெட்டி போட்ட ஆட்டமும், ரசிகர்களை சுளுக்கெடுத்தது. அடுத்தடுத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த கிரித்தி ஷெட்டி, பாலா இயக்கும் 'வணங்கான்' படத்திலும் சூர்யாவுக்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளார்.

விரைவில் மச்சர்ல நியோஜகவர்கம்

விரைவில் மச்சர்ல நியோஜகவர்கம்

இந்நிலையில், தெலுங்கில் அவர் நடித்துள்ள 'மச்சர்ல நியோஜகவர்கம்' திரைப்படம் விரைவில் ரிலீஸாகிறது. இதனையடுத்து இந்தப் படம் குறித்து ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிரித்தி ஷெட்டி, "எனது முதல் தெலுங்கு படமான உப்பெனாவில் விஜய் சேதுபதி போன்ற திறமையான நடிகருடன் நடித்தது பெருமையாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருந்தது. அதில் என் கேரக்டரை ரசிகர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டதில் மிகவும் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைவதாக" தெரிவித்தார். .

பாலிவுட்டில் இருந்து நிறைய வாய்ப்புகள்

பாலிவுட்டில் இருந்து நிறைய வாய்ப்புகள்

தொடர்ந்து பேசிய அவர், "ஒவ்வொரு படத்தையும், என் மனதுக்கு பிடித்திருந்தால் மட்டுமே ஒப்புக்கொள்கிறேன். குறுகிய காலத்திலேயே சினிமாவில் வெற்றி, தோல்வி அனுபவம் எனக்கு கிடைத்துவிட்டது" எனக் கூறியுள்ளார். மேலும், "பாலிவுட்டில் இருந்து எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால், நான்தான் அவற்றை நிராகரித்துவிட்டேன். தற்போது தமிழ், தெலுங்கில் மட்டும் நடிப்பதையே விரும்புகிறேன்" எனக் கூறி, முன்னணி நடிகைகளுக்கே ஜெர்க் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X