வில்லனாகிறார் 'பாய்ஸ்' மணிகண்டன்!
சென்னை: நாட்டை உலுக்கி வரும் பாலியல் பலாத்காரங்களையே கருவாக வைத்து ஒரு படத்தை எடுத்து வருகின்றனர். படத்துக்கு காதல் 2014 என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.
நாட்டில் நடக்கும் பரபரப்புச் சம்பவங்களைப் படமாக்குவது திரையுலகினரின் ஸ்டைல். அந்த வகையில் தற்போது அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்களை கதைக் கருவாக வைத்து காதல் 2014 என்று ஒரு படம் தயாராகிறது.
அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் ஆர்.எல்.யேசுதாஸ் வழங்க சரவணா பிலிம் மேக்கர்ஸ் சுதாகர் தயாரிக்கும் படம்தான் இந்த காதல் 2014

ஹரீஷ் - நேகா
ஹரீஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார்.

வில்லனான "பாய்ஸ்" மணிகண்டன்
ஷங்கரின் பாய்ஸ் பட நாயகர்களில் ஒருவரான மணிகண்டன் இப்படத்தின் மூலம் வில்லன் அவதாரம் எடுக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்துள்ளார் மணிகண்டன்.

பிரிந்து போயன பாய்ஸ்
பாய்ஸ் நாயகர்கள் சித்தார்த், பரத், நகுல் ஆகியோர் தனித் தனியாக பிரிந்து ஹீரோக்களாக வலம் வருகின்றனர். நாயகிகளான ஜெனிலியா, சிந்தூரி ஆகியோர் முன்னணி நாயகிகளாக தனித் தனியாக முத்திரை பதித்தனர். ஆனால் மணிகண்டன் மட்டும் சோடை போகவில்லை.

வில்லன் அவதாரம்
இந்த நிலையில் தற்போது மணிகண்டன் வில்லனாகி விட்டார். காதல் 2014 மூலம் தமிழ் சினிமாவின் புதிய வில்லனாக அவர் அவதாரம் எடுத்துள்ளார்.

அப்புக்குட்டி
இப்படத்தில் அப்புக்குட்டி, பசங்க சிவகுமார், வேல்முருகன், கம்பம் மீனா, ஷர்மிளா, அழகப்பன், ராஜபாண்டி, ஷிவாணி, சேலம் சின்ன கருப்பு ஆகியோரும் நடிக்கிறார்கள்.

பைசல் இசை
ஒளிப்பதிவை ரித்தீஷ்கண்ணா கவனிக்க பாடல்களை விவேகா, லலிதானந்த், சுகந்தன் எழுத பைசல் இசையமைக்கிறார்.

டான்ஸ் தினா, ராதிகா, சதீஷ்
கலைக்கு சுந்தர்ராஜன், நடனத்திற்கு தினா, ராதிகா, சதீஷ், எடிட்டிங் சங்கர் கவனிக்கிறார்கள். பி.சுதாகர் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சுகந்தன்.

என்ன கதை
படம்பற்றி இயக்குனர் சுகந்தன் கூறுகையில், இன்று இந்தியா முழுக்க தினசரி பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தியாக வருவதே பாலியல் பலாத்காரங்கள் தான் அதைதான் இதில் கதை கருவாக வைத்திருக்கிறோம்.

அடர்ந்த காட்டுக்குள் இளம் காதலர்கள்
இளம் காதலர்களான ஹரீஷ் - நேகா இருவரும் அடர்ந்த கட்டுப் பகுதிக்குள் செல்வதை பார்த்த ஒரு குரூப் பின் தொடர்கிறது.

கட்டிப் போட்டு கற்பழிப்பு
ஹரீஷை கட்டிப் போட்டு விட்டு நேகாவை கற்பழித்து விடுகிறார்கள். அதற்குப் பிறகு அவள் அந்த வேதனையை நினைத்து வீட்டிற்குள்ளேயே முடங்கி விட்டாளா, இல்லை அதை மறந்து வாழ்க்கை போரட்டங்களை எதிர்நோக்கி பயணமானாளா? இதை தான் படமாக்கி இருக்கிறோம்.

நாட்டுக்குத் தேவைதான்
இன்று நாட்டுக்கு தேவையான கருத்தைத் தான் பதிவு செய்திருக்கிறோம். படம் விரைவில் திரைக்கு வருகிறது என்றார்.


Click it and Unblock the Notifications











