லவ்வுங்கறது ஒரு கமிட்மெண்ட்... டான் ட்ரெயிலர் வெளியீட்டில் எஸ்ஜே சூர்யாவின் லவ் அட்வைஸ்!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சிவாங்கி பால சரவணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள படம் டான். இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியீடு நேற்றைய தினம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

டான் படம்

டான் படம்

நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சிவாங்கி, பால சரவணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் டான். இந்தப் படம் வரும் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தில் கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். பள்ளி மாணவராகவும் அவர் நடித்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் படம்

டாக்டர் படம்

முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மிகச்சிறந்த வெற்றியை கொடுத்துள்ளது. இந்தப் படத்தை நெல்சன் இயக்கியிருந்த நிலையில், படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. கடத்தலை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் சிறப்பான திரைக்கதையுடன் வெளியானது.

ட்ரெயிலர் வெளியீடு

ட்ரெயிலர் வெளியீடு

இந்நிலையில் அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள டான் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நேற்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

காதல் அட்வைஸ்

காதல் அட்வைஸ்

சென்னையில் பிரபல கல்லூரியில் இந்த ட்ரெயிலர் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. இதில் படத்தின் நடிகர், நடிகைகள் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநரும் நடிகருமான எஸ்ஜே சூர்யா, காதல் குறித்த அட்வைசை வெளிப்படுத்தினார். காதல் என்பது ஒரு கமிட்மெண்ட் என்று அவர் தெரிவித்துள்ளார்.

காதல் என்பது கமிட்மெண்ட்

காதல் என்பது கமிட்மெண்ட்

காதல் என்பது ஒரு கமிட்மெண்ட் என்று கூறிய அவர் அது எளிதானதல்ல என்றும் அவர் தெரிவித்தார். நானும் காதல் செய்கிறேன் என்று கூறிவிட்டு பின்பு சண்டை போட்டு பிரிவதல்ல காதல் என்றும் அது சரியானதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து காதலுக்காக நிற்க முடியும் என்று தெரிந்தால் மட்டுமே காதல் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறப்பான நடிகர்

சிறப்பான நடிகர்

சிறப்பான இயக்குநராகவும் சிறந்த நடிகராகவும் இருந்து வருபவர் எஸ்ஜே சூர்யா. இவரது இயக்கத்தில் வெளியான வாலி, குஷி போன்ற படங்கள் எவர்கிரீன் ரகத்தை சேர்ந்தவை. இதேபோல இவர் நடிப்பில் வெளியான இறைவி உள்ளிட்ட படங்களும் சிறப்பானவை. தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X