முகத்தை மறைத்துக் கொண்டு காரில் ஏறிய சித்தார்த்.. வெளிப்படையாய் போஸ் கொடுத்த அதிதி ராவ்.. டேட்டிங்!
மும்பை: நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக சமீப காலமாக தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன. அதிதி ராவ் பதிவிடும் போஸ்ட்டுகளுக்கு முதல் ஆளாக கமெண்ட் போடுவதும், லைக் போடுவதுமாக உள்ளார் சித்தார்த்.
பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும் போது பிரின்சஸ் ஆஃப் மை ஹார்ட் என சித்தார்த் போட்ட போஸ்ட் தான் இருவரும் காதலித்து வருவதை உறுதி செய்தது.
ஆனால், இதுவரை தங்கள் காதலை வெளிப்படையாக இருவரும் அறிவிக்காத நிலையில், சமீபத்தில் ரெஸ்டரன்ட் ஒன்றில் இருந்து இருவரும் வெளியே வரும் காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

சித்தார்த்தின் காதல் கிசுகிசு
பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சித்தார்த் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். பாய்ஸ் ஹீரோயின் ஜெனிலியாவுடன் ஆரம்பத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்த சித்தார்த் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஹன்சிகாவுடனும் ஓ மை ஃபிரெண்ட் படத்தில் நடித்த நிலையில், ஸ்ருதிஹாசன் உடனும் கிசுகிசுக்கப்பட்டார்.

சமந்தாவுடன் காதல்
ஆனால், நடிகர் சித்தார்த் காதலில் விழுந்தது நடிகை சமந்தா உடன் தான் என பேச்சுக்கள் அடிபட்டன. நடிகை சமந்தா மற்றும் சித்தார்த் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக உறுதியான தகவல்கள் வெளியாகின. அடிக்கடி இருவரும் டேட்டிங் செய்து வந்தனர். ஆனால், மனக்கசப்பு காரணமாக சித்தார்த்தை நடிகை சமந்தா பிரிந்து நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

அதிதி ராவ் உடன் டேட்டிங்
காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அதிதி ராவ் தற்போது நடிகர் சித்தார்த் உடன் டேட்டிங்கில் உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மகா சமுத்திரம் எனும் தெலுங்கு படத்தில் இருவரும் இணைந்து நடித்த நிலையில், ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக கூறுகின்றனர். அடிக்கடி இருவரும் வெளியே டேட்டிங் செல்லும் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி இதனை உறுதிப்படுத்தி வருகின்றன.

என் இதய இளவரசியே
நடிகை அதிதி ராவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரின்சஸ் ஆஃப் மை ஹார்ட் என நடிகர் சித்தார்த் அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோவை போட்டு வாழ்த்து சொன்னது தான் இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருவதையே உறுதி செய்ததாக கோலிவுட் முதல் பாலிவுட் வட்டாரங்கள் வரை தெரிவித்துள்ளன. மேலும், கூடிய சீக்கிரமே இருவரும் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரெஸ்டாரன்ட்டில் ஒன்றாக
சமீபத்தில் மும்பை ரெஸ்டாரன்ட்டில் நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் ஒன்றாக உணவருந்திய வீடியோ காட்சிகளும், ரெஸ்டரன்ட்டில் இருந்து இருவரும் தனித்தனியே வந்த காட்சிகளும் வெளியாகி தொடர்ந்து இருவரும் டேட்டிங் செய்வதை உணர்த்தி உள்ளது.

அதிதி ராவ் அழகாக போஸ்
ரெஸ்டரன்ட்டில் இருந்து தனது காரை நோக்கி மாஸ்க் ஏதும் அணியாமல் மலர்ந்த முகத்துடன் நடிகை அதிதி ராவ் வந்த போது, புகைப்படக் கலைஞர்கள் போட்டோக்கள் எடுக்க அதிதி அழகாக போஸ் கொடுத்தார். பின்னர் தனது காரில் ஏறினார்.

முகத்தை மறைத்துக் கொண்டு
ஆனால், அதே சமயம் நடிகர் சித்தார்த் அதிதி ராவை முன்னே அனுப்பிவிட்டு சிறிது நேரம் கழித்து தான் அதே காருக்கு வந்தார். அதிலும், தனது முகத்தை முழுவதுமாக மாஸ்க் போட்டு மறைத்துக் கொண்டு அவர் உடனடியாக காரில் ஏறிச் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











