அஜீத் சொன்னா கையில் உள்ள படத்தைக் கூட விட்டுட்டு வர ரெடி: முருகதாஸ்
சென்னை: அஜீத் குமாருக்கான ஸ்கிரிப்ட் தயாராக உள்ளதாக இயக்குனர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
பார்க்க சின்ன பையன் மாதிரி இருந்தாலும் தான் எடுக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டும் இயக்குனர் முருகதாஸ் அஜீத் குமாரை மீண்டும் இயக்க பேராவலாக உள்ளார்.

முருகதாஸின் ஃபர்ஸ்ட் ஹீரோ அஜீத்
சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு கோடம்பாக்கம் வந்த முருகதாஸின் முதல் படம் தீனா. கடந்த 2001ல் ரிலீஸான அந்த படத்தில் அஜீத் குமார், லைலா நடித்திருந்தனர். ஆக முருகதாஸின் முதல் ஹீரோ அஜீத்.

கோலிவுட் டூ பாலிவுட்
அடுத்ததாக விஜயகாந்தை வைத்து ரமணா படத்தை எடுத்து சபாஷ் வாங்கினார். தொடர்ந்து சூர்யாவை வைத்து தமிழிலும் பின்னர் ஆமீர் கானை வைத்து இந்தியிலும் கஜினி படத்தை எடுத்து வெற்றியின் உச்சிக்கு சென்றவர் முருகதாஸ்.

ஏழாம் அறிவு முதல் துப்பாக்கி வரை
பாலிவுட்டில் இருந்து வந்தவுடன் மீண்டும் சூர்யாவை வைத்து ஏழாம் அறிவு படத்தை எடுத்த பிறகு விஜயை வைத்து துப்பாக்கி படத்தை எடுத்து பல பிரச்சனைக்களுக்கு பிறகு தீபாவளிக்கு ரிலீஸ் செய்தார். இதையடுத்து அக்ஷய் குமாரை வைத்து இந்தியில் ஒரு படத்தை எடுக்கிறார். அது துப்பாக்கியின் ரீமேக்காக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அஜீத்தை மீண்டும் இயக்க பேராவல்
புதுமுகமாக வந்த தன் மீது நம்பிக்கை வைத்து நடித்த அஜீத்தை மீண்டும் இயக்க முருகதாஸ் பேராவலாக உள்ளார். அவருக்கான ஸ்கிரிப்ட் கூட தயாரித்து வைத்துள்ளாராம். அஜீத் மட்டும் ஓ.கே. சொன்னால் அந்த நேரத்தில் எந்த படம் எடுத்தாலும் அதை விட்டுவிட்டு வரத் தயார் என்று அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











