LIK BO: தமிழ் புத்தாண்டில் LIK அள்ளிய வசூல் என்ன? போகிற போக்கை பார்த்தால்.. LIK 5வது நாள் வசூல்!

சென்னை: நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து, க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் லவ் இன்சுரன்ஸ் கொம்பனி. இந்த படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சக்கை போடு போட்டுக் கொண்டு உள்ளது. இப்படி இருக்கையில் படத்தின் 5வது நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான லவ் இன்சுரன்ஸ் கொம்பனி படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கே ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் சில பல காரணங்களால் தள்ளிப்போனது. காதல் கதை என்பதால் படம் எப்படியும் காதலர் தினத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் அப்போதும் வெளியாகவில்லை.

அதன் பின்னர் ஒரு வழியாக படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி மிரட்டி விட்டது. படம் முழுக்க நகைச்சுவை சமகால இளைஞர்களுக்கு ஏற்ற திரைக்கதை, எஸ்.ஜே. சூர்யாவின் நக்கலும் நையாண்டியும் கலந்த வில்லத்தனம் என மொத்தமாகவே படம் செம்ம எண்டர்டிரைனிங்காக மாறிவிட்டது. இதனால் படம் பார்த்த பெரும்பான்மையான ரசிகர்கள் படத்தை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

Love Insurance Company Box Office Day 5 Pradeep Ranganathan s Film Collects 44 Crore Amid Mixed Trends

எதிர்பார்ப்பு: இப்படி இருக்கும் போது படம் கடந்த 10ஆம் தேதி வெளியானதில் இருந்து முதல் வாரத்தின் வீக் எண்ட் வரை சிறப்பாக கல்லா கட்டியது. அதன் பின்னர் செல்ஃப் எடுக்காத வண்டி போல படம் படுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்த படங்களான லவ் டுடே, டிராகன், டியூட் என மூன்று படங்களுமே பாக்ஸ் ஆபீஸில் ரூபாய் 100 கோடிகளை வசூலித்தது.

வசூல்: இதனால் பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் எடுத்தால் குறைந்த முதலீட்டில் பெரிய லாபம் பார்க்கலாம் என்று தயாரிப்பாளர்கள் பலரும் நினைத்தனர். அப்படி இருக்கையில் லவ் இன்சுரன்ஸ் கொம்பனி படம் ஐந்து நாட்களில் ரூபாய் 44 கோடிகள் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்களை வெளியிடும் சாக்நிக் வலைதளம் வெளியிட்டுள்ளது. தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதியும் தமிழ் மற்றும் தெலுங்கு என படம் மொத்தமாகவே ரூபாய் 4.15 கோடிகள் தான் வசூலித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான இந்த படம் ரூபாய் 100 கோடிகளை வசூலிக்குமா என்ற சந்தேகம் திரைத்துறையில் ஓடிக் கொண்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X