LIK Day 1 Box Office - எல்ஐகே முதல் நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸில் பிரதீப் ரங்கநாதன் கெத்து
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, சீமான், க்ரீத்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே). அனிருத் இசையமைத்திருக்கிறார். நீண்ட வருடங்கள் கழித்து விக்கி இயக்கத்தில் படம் வந்திருக்கிறது. படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அந்த ஹைப்போடு நேற்று திரையரங்குகளில் படம் வெளியானது. இந்நிலையில் முதல் நாளான நேற்று பாக்ஸ் ஆஃபிஸில் அந்தப் படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் சிவனுக்கு கடந்த சில வருடங்களாகவே கரியர் சரியாக இல்லை. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி தோல்வி கண்ட அவர்; அஜித்தை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தார். ஆனால் அதில் தயாரிப்பு தரப்பு சில மாற்றங்களை சொன்னதாகவும்; அதை செய்ய மறுத்து படத்திலிருந்து விக்கி வெளியேறிவிட்டதாகவும் தெரிகிறது. ஏகே படம் மிஸ் ஆனதை அடுத்து ஜென் ஸி தலைமுறையில் கெத்தாக இருக்கும் பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்ஐகே படத்தை ஆரம்பித்தார்.

நல்ல எதிர்பார்ப்பு: விக்னேஷ் சிவனின் மேக்கிங் ஸ்டைலுக்கு எப்போதும் ரசிகர்கள் இருக்கவே செய்கிறார்கள். ராஜ்குமார் ஹிரானி போன்று படம் எடுக்க தமிழ் சினிமாவில் விக்கியால்தான் முடிகிறது என்று இயக்குநர் ராமும் புகழ்ந்திருந்தார். அப்படி இருக்கையில் பிரதீப்பும், விக்னேஷ் சிவனும் முதன்முறையாக இணைந்திருந்தது பெரிய எதிர்பார்ப்பை பற்ற வைத்தது. சில சிக்கல்களால் ரிலீஸுக்கு திணறிக்கொண்டிருந்த அந்தப் படம் நேற்று ஒருவழியாக திரையரங்குகளில் ரிலீஸாகிவிட்டது. ரசிகர்களூம் ஆர்வத்துடன் படம் பார்க்க சென்றார்கள்.
எப்படி இருக்கு படம்?:2040ல் இந்த உலகம் எப்படி இருக்கும். அப்போது காதலை தீர்மானிக்கும் ஒரு ஆப் என்னவெல்லாம் ஹீரோவின் வாழ்க்கையில் செய்து ஆதிக்கம் செலுத்துகிறது. அதிலிருந்து அந்த ஹீரோ மீண்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் ஒன்லைன் ஆகும். ஒன்லைன் சுவாரஸ்யமாக இருந்தாலும் ரசிகர்களுக்கு அதனை பசி தீரும்வகையில் பரிமாறவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் பட்ம் இன்னும் சூப்பராக இருந்திருக்கும் எனவும் கூறுகிறார்கள் படம் பார்த்தவர்கள்.
பிரதீப் ரங்கநாதன் எப்படி?: இது ஒருபக்கம் இருக்க பிரதீப் ரங்கநாதன் ஹீரோ என்பதால் அதுவும் படத்தின் மீதான ஆவலை அதிகரித்தது. ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு ஸ்டைலை கொண்டு வரும் அவர்; இந்தப் படத்திலும் அந்த மாதிரியான ஸ்டைலை கொண்டு வந்து ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார். அதேசமயம் ஒருசிலரோ, இன்னமும் தனுஷ் சாயலில்தான் பிரதீப் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படியே நடித்தால் இன்னும் மூன்று, நான்கு படங்களில் காணாமல் போய்விடுவார் என்றும் ஆரூடம் கூறுகிறார்கள். இருப்பினும் அவர்களும் PR நடிப்பை பாராட்டவே செய்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
படத்தின் வசூல் நிலவரம்: இதற்கு முன்னதாக பிரதீப் நடித்த லவ் டுடே, டிராகன், டியூட் ஆகிய மூன்று படங்களுமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது. எனவே இப்படமும் அதே ரிசல்ட்டை பெறுமா என்பது குறித்த ஆவலும் இருந்தது. இந்நிலையில் படம் வெளியான முதல் நாளான நேற்று எல்ஐகே செய்திருக்கும் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள் படி அந்தப் படம் நேற்று தமிழில் 6.32 கோடி ரூபாயும், தெலுங்கில் 1.61 கோடி ரூபாயும் வசூலித்து மொத்தம் 7 கோடியே 93 லட்சம் ரூபாயை பாக்ஸ் ஆஃபிஸில் அள்ளியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதீப்பின் இப்போதைய ஃபார்முக்கு இது கொஞ்சம் குறைவுதான் என்றாலும் போகப்போக பிக்கப்பாகிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications















