அவ்வளவு காதல்.. மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்து கணவனின் உடலை தூக்கிச் சுமந்த மந்திரா பேடி

மும்பை: நடிகை மந்திரா பேடியின் கணவரும் இயக்குநருமான ராஜ் கெளஷல் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார்.

பொதுவாகவே கணவரின் உடலை பெண்கள் தூக்கிச் சுமக்க மாட்டார்கள். அதே போல இடுகாடுக்கும் செல்லமாட்டார்கள்.

ஆனால், மூடநம்பிக்கைகளை உடைத்தெறியும் விதமாக கணவர் மீது கொண்ட அதீத காதல் காரணமாக நடிகை மந்திரா பேடி இப்படி செய்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

கணவர் மரணம்

கணவர் மரணம்

விஜே, மாடல், டிவி நடிகை, சினிமா நட்சத்திரம் என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகை மந்திரா பேடி. நேற்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக தனது ஆருயிர் கணவனை பறிகொடுத்து சோகத்தில் வாடி வருகிறார்.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

பாலிவுட் பிரபலங்கள் முதல் கோலிவுட் பிரபலங்களான குஷ்பு, லாவண்யா திரிபாதி உள்ளிட்ட பலரும் நடிகை மந்திரா பேடிக்கு ஆறுதல் கூறினர். பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி உள்ளிட்ட சில பாலிவுட் பிரபலங்கள் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.

கணவரின் உடலை சுமந்து

கணவரின் உடலை சுமந்து

பெண்கள் பொதுவாகவே இறுதி ஊர்வலத்தில் கணவரின் உடலை சுமக்க மாட்டார்கள். ஆனால், காதல் கணவர் ராஜ் கெளஷலின் மறைவால் மிகவும் மனம் வாடிய நடிகை மந்திரா பேடி மூடநம்பிக்கைகளை ஒதுக்கி வைத்து கணவரின் உடலை முன் நின்று தூக்கிச் சுமந்த காட்சிகள் அனைவரையும் வியப்பில் அழ்த்தி உள்ளது.

போல்டானவர்

போல்டானவர்

நடிகை மந்திரா பேடி இயல்பிலேயே படு போல்டானவர். அவரது உடை, தோற்றம், செயல் என எல்லாவற்றிலுமே தைரியமும் துணிச்சலும் காணப்படும். மேலும், குழந்தைகள் இருவரும் சிறுவர்கள் என்பதால் தனது கணவர் உடலை உறவினர்களுடன் இணைந்து தானே முன் நின்று தூக்கிச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X