காதல்ன்னா தையா, தக்கான்னு குதிக்கும் சித்தார்த்
ஷங்கரின் பாய்ஸ் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அவர் தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் அவர் முதன்முதலாக தயாரித்து நடித்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நன்றாக ஓடுகிறது. இதையடுத்து அதை இந்தியில் ரீமேக் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.
அவர் ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்துவிட்டார். கொஞ்ச காலம் கமல் மகள் ஸ்ருதி ஹாசனுடன் மும்பையில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர்களுக்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை அவர்கள் பிரிந்து ஆளுக்கொரு திக்காக சென்றுவிட்டனர்.
இந்நிலையில் சித்தார்தை பார்க்கும் மீடியாக்காரர்கள், இரண்டாவது திருமணம் எப்பொழுது என்று கேட்டாலே டென்ஷனாகிவிடுகிறாராம். சரி திருமணத்தை விடுங்க காதல் பற்றி ஏதாவது பேசலாமா என்று கேட்டால் அதைவிட டென்ஷனாகிறாராம். இதனால் தமிழ் மீடியாக்காரர்களிடம் அவர் அவ்வளவாக பேசுவதில்லை.
இது என்னய்யா இந்த மனுஷன் கல்யாணம்னாலும் குதிக்கிறாரு, காதல்னாலும் குதிக்கிறாரு என்று மீடியாக்காரர்கள் நொந்துகொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications












