மாஸ்டர் படத்தின் 4வது புரமோ ரிலீஸ்.. சண்டைக்கு ரெஸ்ட்.. ஒரே ரொமான்ஸ் மோடு தான்.. ரெண்டு பேரும் செம!
சென்னை: மாஸ்டர் படத்தின் 4வது புரமோவாக "அந்த கண்ண பார்த்தாக்கா" பாடல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வரும் பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகின்றன.
தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், விஜே ரம்யா, சஞ்சீவ் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

தெறிக்கவிடும் புரமோஷன்
தினமும் மாலை 6 மணிக்கு மாஸ்டர் படத்தின் புதிய புரமோஷன் வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கல்லூரி, சிறுவர் சீர்த்திருத்த பள்ளி, அரசியல் என ஏகப்பட்ட விஷயங்களை சுற்றி இந்த படத்தின் திரைக்கதை உருவாகி உள்ளது.

வித்தியாசமான தோற்றத்தில்
குடிக்கு அடிமையான ஜேடியாக இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் விஜய் நடித்துள்ளார். பூனைக்குட்டியை தூக்கி வைத்துக் கொண்டு தனது நண்பர்களுடன் விஜய் கொடுத்துள்ள வித்தியாசமான போஸ் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் லைக்குகளை அள்ளியது. குடி பழக்கத்தை க்விட் பண்ணி ஸ்மார்ட்டாகவும் விஜய் இந்த படத்தில் டிரான்ஸ்ஃபார்ம் ஆகும் காட்சிகளும் உள்ளன.
ரொமான்டிக் மோட் ஆன்
தொடர்ந்து மாஸ்டர் படத்தின் சண்டை காட்சிகள் அடங்கிய புரமோக்கள் வெளியான நிலையில், தற்போது, சண்டைக்கு ரெஸ்ட், கொஞ்சம் ரொமாண்டிக் மோட் ஆன் என கேப்ஷன் கொடுத்து, "அந்த கண்ண பார்த்தாக்கா" பாடல் புரமோவை படக்குழு தற்போது ரசிகர்களின் விழிகளுக்கு விருந்து படைத்துள்ளது.

இருவரும் செம அழகு
தளபதி விஜய்யும், மாளவிகா மோகனனும் இந்த பாடல் புரமோவில் செம அழகாக உள்ளனர். கடந்த ஒரு வருடமாக இந்த ஜோடியை திரையில் காண காத்திருந்த ரசிகர்களுக்கு, ஒரு வழியாக வரும் ஜனவரி 13ம் தேதி தியேட்டர்களில் பொங்கல் திருவிழாவுடன் மாஸ்டர் திருவிழாவும் களைகட்ட போகிறது.


Click it and Unblock the Notifications











