Don't Miss!
- News
இங்க வந்துட்டு எடப்பாடியை பத்தி பேசலனா எப்படி? ரவுண்டு கட்டிய உதயநிதி ஸ்டாலின்! ஆஹா.. மாநாடு மாதிரி!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
பிக் பாஸ் வீட்டில் ஸ்டார்ட்டான காதல் கதை.. மகேஸ்வரிக்கு பக்காவாக ரூட் விடுகிறாரா ராம்?
சென்னை: பார்ப்பதற்கு பாலாஜி முருகதாஸ் மாதிரி ஹேண்ட்ஸமாக இருக்கிறாரே ராம் ராமசாமி என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்க, பாலாவை போல ரொமான்டிக் டிராக்கையும் ஆரம்பித்து விட்டார் ராம் ராமசாமி.
சன் மியூசிக்கின் முன்னாள் விஜேவான மகேஸ்வரி ஏகப்பட்ட சேனல்களில் பணியாற்றி உள்ளார்.
திருமணமாகி ஒரு மகனும் உள்ள நிலையில், கணவர் தொல்லை தாங்க முடியவில்லை என விவாகரத்து செய்துள்ளார்.
கஜினி
செகண்ட்
பார்ட்
எடுக்க
ப்ளான்
போடும்
ஏஆர்
முருகதாஸ்…
சூர்யாவின்
ரியாக்ஷன்
இதுதான்!

விஜே மகேஸ்வரி விவாகரத்து
சன் மியூசிக்கில் விஜேவாக மீடியா பணியை ஆரம்பித்த மகேஸ்வரிக்கு அப்பவே ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர். பின்னர், மற்ற சேனல்களிலும், சில சினிமாக்களிலும் தலை காட்டி வந்தார் விஜே மகேஸ்வரி. திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால், கணவர் வீட்டில் ரொம்ப டார்ச்சர் கொடுப்பதாக சொல்லி கணவரை விவாகரத்து செய்த மகேஸ்வரி தற்போது பிக் பாஸ் போட்டியாளராக மாறி உள்ளார்.

விக்ரம் படத்தில்
கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருப்பார் விஜே மகேஸ்வரி. அந்த படத்தில் ஒரு காட்சி மட்டுமே என்றாலும், அதன் மூலமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது பெரிய விஷயம் தான்.

வாய்ஸ் வருது
பிக் பாஸ் வீட்டில் சைலன்ட்டாக மிக்சர் தின்னவெல்லாம் தான் வரவில்லை என்பதை ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறார் விஜே மகேஸ்வரி. அமுதவாணன் டாய்லெட் சென்று கொண்டிருந்த போது வாய்ஸ் கொடுத்து பயமுறுத்தியது. ஜிபி முத்து ஜிப் போடவில்லை என கலாய்த்தது. தனலட்சுமியுடன் சாம்பார் சண்டை, சாந்தி உடன் சண்டை என தொடர்ந்து இவரது வாய்ஸ் அதிகமாவே வருது.

காதல் டிராக்
பிக் பாஸ் வீட்டில் பாதி பாலாஜி முருகதாஸ் பாதி நிரூப் மாதிரி ஒருத்தர் வந்தாரே அந்த ராம் ராமசாமி எங்கேடா காணோம் என பார்த்தால், பையன் சைலன்ட்டாக விஜே மகேஸ்வரியிடம் மட்டும் ஸ்வீட்டாக ஃபன் பண்ணி வருகிறேன் என படுக்கையில் பேசும் காட்சிகள் பிக் பாஸ் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. ஆஹா பிக் பாஸ் சீசன் 6லும் ஒரு லவ் டிராக் முதல் வாரத்திலேயே ஆரம்பித்து விட்டதே என கலாய்த்து வருகின்றனர்.

என்னிடம் மட்டும் ஏன்
எல்லார் கிட்டேயும் இப்படி ஸ்பெஷலா ஸ்வீட்டா பேசுறீங்களா என விஜே மகேஸ்வரி தனது பின்னாலே திரியும் ராம் ராமசாமி பார்த்து ஓப்பனாகவே கேட்க, உங்களிடம் மட்டும் தான் ஸ்வீட்டா பேசுறேன் சும்மா ஒரு ஃபன்னுக்கு என ராம் ராமசாமி பேச, ரொம்பவும் கடுப்பை காட்டாமல் சைலன்ட்டாக விஜே மகேஸ்வரி இந்த விஷயத்தை டீல் செய்து வருவதை பார்த்த ரசிகர்கள் அய்யோ பத்திக்கிச்சா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிக் பாஸ் ஜோடி இவங்க தான்
2023ல் நடைபெற உள்ள பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு முதல் ஜோடியாக இவங்க இரண்டு பேரும் தான் போகப் போகின்றனர் என்றே நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர். கடந்த சீசனில் அமீர் மற்றும் பாவனி பிக் பாஸ் வீட்டில் ஆரம்பித்த காதலை பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கல்யாணம் எல்லாம் பண்ணி கன்ஃபார்ம் பண்ணியது குறிப்பிடத்தக்கது.