My Half Soul.. லவ் டுடே நாயகி இவானா வெளியிட்ட போட்டோ.. யார் அந்த பையன்.. தப்பா நினைச்ச ஃபேன்ஸ்!
சென்னை: லவ் டுடே ஹீரோயின் இவானா இன்று தனது 23வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 2000ம் ஆண்டு பிறந்த இவானா சரியான 2கே கிட் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் ஆண் ஒருவர் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு My Half Soul என இவானா கொடுத்துள்ள கேப்ஷன் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
யார் அந்த பையன் என இவானாவின் ரசிகர்கள் பலர் கமெண்ட் அடித்தும் இருவரும் காதலிக்கின்றனரா? என்றும் கேள்வி எழுப்பி அவர்களின் உறவையே கொச்சைப்படுத்தி வருகின்றனர்.

23 வயதாகும் இவானா
இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடித்த நாச்சியார் எனும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இவானா. அதற்கு முன்னதாக மலையாளங்களில் சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார். 2000ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி பிறந்த இவானா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

மாமாக்குட்டிகளின் செல்லம்
நாச்சியார், சிவகார்த்திகேயனின் ஹீரோ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை இவானாவுக்கு கடந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறியது. சொல்லுங்க மாமாக்குட்டி என அவர் சொல்லும் வசனம் ஏகப்பட்ட ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சேலை மற்றும் சுடிதார் உடைகளைல் க்யூட்டாக வந்து கோலிவுட் இளைஞர்களை சாய்ச்சிப்புட்டார் இவானா.

தோனி தயாரிப்பில் நடிக்கிறார்
லவ் டுடே படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் உருவாகி LGM எனப்படும் Lets Getting Married படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் இவானா. இந்த படத்தில் நதியா, யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்களும் நடித்து வருகின்றனர்.

ரசிகர்கள் வாழ்த்து
நடிகை இவானாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இவானா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட போஸ்ட் ஒன்று ரசிகர்களை சற்றே குழப்பி உள்ளது.

மை ஹாஃப் சோல்
என் உயிரின் பாதி என்கிற அர்த்தத்துடன் My Half Soul என கேப்ஷன் கொடுத்து இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இவானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் இவர் தான் உங்கள் காதலரா என தப்பாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இவானாவின் சகோதரர்
இவானா தனது போஸ்ட்டுக்கு கீழ் அந்த இளைஞரின் பெயர் லியோ என்றும் இவர் தான் என் பிறந்தநாளுக்கான சரியான கிஃப்ட் என போட்டதும் அவசரப்பட்ட ரசிகர்கள் அப்படியொரு கமெண்ட்டை போட்டு வருகின்றனர். ஆனால், அதற்கு கீழ் #justtwinsthings
என நடிகை இவானா தெளிவாக இருவரும் ஒரே நாளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்றும் அவர் தனது சகோதரர் என்பதையும் ஹாஷ்டேக் போட்டு விளக்கி இருப்பதை சில ரசிகர்கள் கண்டுபிடித்து, அய்யோ தப்பா நினைக்காதீங்க, இவானாவின் சகோதரர் அவர் என ரசிகர்களை உஷார் படுத்தி விட்டனர்.


Click it and Unblock the Notifications











