ஆமாம்.. அப்படித்தான் போட்டேன்.. ஆனால், ஆபாச போஸ்ட்டுகள் எல்லாம் ஃபேக்.. பிரதீப் ரங்கநாதன் விளக்கம்!

சென்னை: நடிகர் விஜய், அஜித்தின் மங்காத்தா படம், யுவன் சங்கர் ராஜா, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனி பற்றி லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் பேஸ்ஃபுக்கில் பதிவிட்ட பழைய பதிவுகள் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அது தொடர்பான விளக்கத்தை லவ் டுடே இயக்குநர் கூறியுள்ளார்.

ஜெயம் ரவியின் கோமாளி படத்தை இயக்கும் போது அந்த படத்தில் ரஜினிகாந்த் குறித்த ட்ரோல்கள் இடம்பெற்ற நிலையில் பெரிய எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால், அப்போது கூட பிரதீப் ரங்கநாதனின் பழைய போஸ்ட்டுகள் கிண்டப்படவில்லை. ஆனால், தற்போது லவ் டுடே படத்தின் மூலமாக ஹீரோவாகவும் பிரதீப் ரங்கநாதன் ஹிட் அடித்த நிலையில், அவரது பழைய வரலாறு தோண்டி எடுக்கப்பட்டு விளாசப்பட்டு வருகிறது.

லவ் டுடே ஹீரோ

லவ் டுடே ஹீரோ

கோமாளி படத்தை இயக்கி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக லவ் டுடே படத்தை இயக்கி ஹீரோவாக நடித்து அசத்தி உள்ளார். 50 கோடிக்கும் அதிகமாக படத்திற்கு வசூல் குவிந்து மிகப்பெரிய வெற்றிப் பெற்றுள்ள நிலையில், பிரதீப் ரங்கநாதனின் பழைய போஸ்ட்டுகள் டிரெண்டாகி அவருக்கு எதிரான கண்டனங்கள் கிளம்பி உள்ளன.

விஜய், யுவன், சச்சின், தோனி

விஜய், யுவன், சச்சின், தோனி

நடிகர் விஜய், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி உள்ளிட்ட பல பிரபலங்களை பிரதீப் ரங்கநாதன் பல வருடங்களுக்கு முன்பாக பங்கமாக கலாய்த்த பேஸ்புக் ஸ்க்ரீன் ஷாட்டுகளை தேடிக் கண்டுபிடித்துப் நெட்டிசன்கள் போட்டு வருகின்றனர். இவ்ளோ வன்மம் பிடிச்சவனா நீ என திட்டி வருகின்றனர்.

பிரதீப் ரங்கநாதன் விளக்கம்

பிரதீப் ரங்கநாதன் விளக்கம்

இந்நிலையில், இந்த பிரச்சனையை முத்த விடக் கூடாது என நினைத்த லவ் டுடே படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன் தனது முந்தைய செயல்களுக்கு வருத்தம் தெரிவித்தும், விளக்கம் கொடுத்தும் போட்டுள்ள போஸ்ட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

போட்டோஷாப் பண்ணிட்டாங்க

போட்டோஷாப் பண்ணிட்டாங்க

என் பெயரில் சில போட்டோஷாப் பதிவுகள் வலம் வருகின்றன. ஆனால், அவற்றின் மீது எனக்கு கோபமே இல்லை. அதையும் தாண்டி எனக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி என்றும் தனது பேஸ்புக் பக்கமே முடக்கப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

சில போஸ்ட்டுகள் உண்மை

சில போஸ்ட்டுகள் உண்மை

மேலும், இன்னொரு ட்வீட்டில், அதில் சில போஸ்ட்டுகள் உண்மையிலேயே நான் தான் போட்டேன். இளமை காலத்தில் செய்த தவறு அது, ஆனால், ஆபாச வார்த்தைகளுடன் உலவும் போஸ்ட்டுகள் மட்டும் ஃபேக்காக சித்தரிக்கப்பட்டவை என பிரதீப் ரங்கநாதன் தனது விளக்கத்தை கொடுத்துள்ளார்.

மன்னிச்சிடுங்க

மன்னிச்சிடுங்க

அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால், ஒவ்வொரு நாளும் என்னை கொஞ்சம் கொஞ்சமாக திருத்திக் கொண்டு வருகிறேன். இளமை காலத்தில் மெச்சூரிட்டி இல்லாமல் பதிவிட்ட சில போஸ்ட்டுகளை வைத்து இப்போ இருக்கிற பிரதீப்பை எடை போட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X