Don't Miss!
- News
அடிக்கடி குலுங்கும் டெல்லி! நிலநடுக்கம் திடீரென அதிகரிக்க என்ன காரணம்! தமிழ்நாட்டின் உண்மை நிலை என்ன
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. நியூசி,-ன் அதிவேக பவுலரை அசால்ட் செய்த சுப்மன் கில்.. வாயடைத்துப்போன ரோகித்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 வரை இந்த 4 ராசிக்கு பிரச்சனை மேல பிரச்சனை வரும்... கவனமா இருங்க..
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Finance
என் இதயமே கனத்து விட்டது.. 8 மாத கர்ப்பிணி பெண் கூகுள் பணி நீக்கம் குறித்து கலக்கம்.. !
- Automobiles
குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு விருது… இருமடங்காக உயர்ந்த சம்பளம்!
சென்னை : லவ் டுடே பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் லவ் டுடே. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்குநராக மட்டுமில்லாமல், ஹீரோவாகவும் அறிமுகமாகமானார்.
கதாநாயகியாக இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், ரவீனா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
சம்பளத்தை
ஒரேடியாக
இரண்டு
மடங்கு
உயர்த்திய
லவ்
டுடே
ஹீரோ...
அடிச்சான்
பாரு
பம்பர்
ஜாக்பாட்

லவ் டுடே
இன்றைய இளம் தலைமுறையின் காதலை அப்பட்டமாக புட்டு புட்டு வைத்துள்ளது லவ் டுடே. ஒரே செல்போனை கையில் வைத்துக்கொண்டு காதல் என்ற போர்வையில் இன்றைய இளவட்டங்கள் கொடுக்கும் அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருந்தார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். காதல், நகைச்சுவை, சென்டிமெண்டுடன் கதையை அழகாக நகர்த்தி இருந்தார்.

மகத்தான வசூல்
லவ் டுடே படத்திற்கு முதல் நாள் சுமாரான வரவேற்பு தான் கிடைத்த நிலையில், படத்தைப் பார்த்துவிட்டு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்ததால், திரையரங்கில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இந்த படத்தை பார்க்க காலேஜை கட் அடித்து விட்டு கூட்டம் கூட்டாக சென்றனர்.

உயர்ந்த சம்பளம்
இந்த படத்தில் இடம் பெற்ற சொல்லுங்க மாமா குட்டி என்ற வசனம் மிகப்பெரிய அளவில் டிராண்டானது. கல்பாத்தி எஸ் அகோரம் நிறுவனம் தயாரிப்பில் வெறும் 4 கோடியில் எடுக்கப்பட்டு இப்படம் 100 கோடி வரை வசூல் சாதனை படைத்தது. இதனால், லவ் டுடே படத்துக்காக 1 கோடியே 50 லட்சம் ரூபாயை சம்பளமாக பெற்ற பிரதீப், தனது அடுத்த படத்துக்கு 3 கோடி ரூபாய்யை சம்பளமாக பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.

இயக்குநருக்கு விருது
இந்நிலையில், லவ் டுடே படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு தெலுங்கு திரையுலகம் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை வழங்கி அவரை பெருமைப்படுத்தி உள்ளது. ஹைதராபாத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் சந்தோஷம் தென்னிந்திய திரைப்பட விருதுகள் 2022 விழாவில் இந்த விருதினை மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது கையால் பிரதீப் ரங்கநாதனுக்கு கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.