Loveyapa Box Office: 60 கோடியில் இந்தியில் வெளியான லவ் டுடே ரீமேக்.. முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?
மும்பை: பாலிவுட்டில் நேற்று அமீர்கான் மகன் மற்றும் போனி கபூர் மகள் இணைந்து நடித்த லவ்யப்பா படம் வெளியானது. அதற்கு போட்டியாக ஹிமேஷ் ரேஷ்மயா நடித்த பேடாஸ் ராஜ்குமார் படமும் வெளியானது. இந்த இரண்டு படங்களில் பேடாஸ் ரவிகுமார் கூடுதல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
போனி கபூர், அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட பலர் இணைந்து சுமார் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பாலிவுட்டில் லவ் டுடே படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், முதல் நாள் வசூல் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பது தான் வருத்தமான செய்தியாக மாறியிருக்கிறது.

லவ்யப்பா படத்திற்கு பாலிவுட்டின் பல பிரபலங்கள் தொடர்ந்து புரமோஷன் செய்து வந்தனர். ஜான்வி கபூர் தனது தங்கைக்காக தியேட்டரில் படத்தை எல்லாம் பார்த்துக் கொண்டாடினார். அமீர்கான், ஷாருக்கான், சச்சின் என பல பிரபலங்கள் அந்த படத்திற்கு புரமோஷன் செய்தனர்.
கலவையான விமர்சனம்: லவ்யப்பா படத்திற்கு இந்தியில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே குவிந்தன. அமீர்கான் மகன் ஜுனைத் கான் நடிப்பில் வெளியான லவ் டுடே இந்தி ரீமேக் படம் ஜாலியான படமாக உள்ளது என தெரிவித்த ரசிகர்கள் குஷி கபூர் தான் தவறான காஸ்டிங் என்றும் அவருக்கு பதில் வேறு யாரையாவது மாற்றியிருந்தால் கூட படம் பிக்கப் ஆகியிருக்கும் என்றனர். வசூல் நிலவரமும் அதே போல அமைந்துவிட்டது.

லவ்யப்பா முதல் நாள் வசூல்: அத்வைத் சந்திரன் இயக்கத்தில் இந்தி ரசிகர்களை கவரும் விதமாக பெரிய பட்ஜெட்டில் உருவான லவ்யப்பா திரைப்படம் முதல் நாளில் வெறும் 1.25 கோடி ரூபாய் வசூலை மட்டுமே அள்ளியிருக்கிறது. இளைஞர்களை கவரும் விதமான அம்சங்கள் இந்த படத்தில் அதிகம் இருப்பதால் வீக்கெண்டில் படம் பிக்கப் ஆகும் என்கின்றனர். மேலும், அடுத்த வாரம் லவ்வர்ஸ் டே வரை படம் ஓடினால் ஓரளவு வசூல் ஈட்டும் என்கின்றனர்.

பேடாஸ் ரவிகுமார்: ஹிமேஷ் ரேஷ்மயா நடிப்பில் வெளியான பேடாஸ் ரவிக்குமார் திரைப்படம் முதல் நாளில் 2.75 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியிருப்பதாக கூறுகின்றனர். இந்த படத்தின் பட்ஜெட் வெறும் 20 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. லவ்யப்பா படம் சுமார் 60 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழில் வெளியான லவ் டுடே படத்தின் பட்ஜெட் வெறும் 7 கோடி தான். ஆனால், வசூல் 75 கோடி வரை வந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











