இந்தியில் ரீமேக்காகும் லவ் டுடே... ஆஃபரை தட்டித் தூக்கிய அமீர் கான், ஜான்வி கபூர்!

மும்பை: பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே ஹீரோவாக நடித்த லவ் டுடே திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.

5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

அதேநேரம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு டோலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இந்தியில் ரீமேக் ஆகும் லவ் டுடே படத்தின் ஹீரோ, ஹீரோயின் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

 பிரதீப் ரங்கநாதனின் மேஜிக்

பிரதீப் ரங்கநாதனின் மேஜிக்

கடந்தாண்டு வெளியான தமிழ்ப் படங்களில் யாரும் எதிர்பார்க்காத வெற்றியைப் பெற்றது லவ் டுடே. ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் இவானா நாயகியாக நடித்திருந்தார். யுவன் இசையில் பாடல்கள் ஹிட்டடிக்க, படமும் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதனால், 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான லவ் டுடே மொத்தம் 150 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

 ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

பிரதீப் ரங்கநாதன், இவானா ஆகியோருடன் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தெலுங்கிலும் உடனடியாக டப் செய்யப்பட்டு ரிலீஸானது. அங்கும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட லவ் டுடே, பின்னர் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி ஓடிடி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து இந்தப் படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸை பாந்தோம் ஃபிலிம்ஸ் கைப்பற்றியது.

 அமீர் கான் - ஜான்வி கபூர்

அமீர் கான் - ஜான்வி கபூர்

இதுகுறித்து டிவீட் செய்திருந்த ஏஜிஎஸ் அர்ச்சனா, பாந்தோம் பிலிம்ஸுடன் இணைந்து லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது லவ் டுடே இந்தி ரீமேக்கில் ஹீரோ, ஹீரோயின் யார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கானின் வாரிசு ஜுனைத் கானும், ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூரும் லீடிங் கேரக்டரில் நடிக்கின்றனர்.

 விரைவில் அபிஸியல் அப்டேட்

விரைவில் அபிஸியல் அப்டேட்

அமீர் கான் தற்போது நடிப்பில் இருந்து ஓய்வில் இருக்கும் நிலையில், தனது மகன் ஜுனைத் கானை ரேஸில் களமிறக்கி உள்ளார். ஜூனைத் தான் தற்போது யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் 'மஹாராஜா' படத்தில் நடித்து வருகிறார். மேலும், அமீர் கான் தயாரிக்கும் வெப் சீரிஸ் ஒன்றிலும் கமிட் ஆகியுள்ளார். இதன் படப்பிடிப்புகள் முடிந்ததும் லவ் டுடே இந்தி ரீமேக் ஸ்டார்ட் ஆகும் என சொல்லப்படுகிறது.

 பாலிவுட் ரசிகர்கள் எதிர்பார்ப்பு

பாலிவுட் ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அதற்கு முன்பாக லவ் டுடே இந்தி ரீமேக்கில் ஜுனைத் கானும் குஷி கபூரும் நடிப்பது குறித்து அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லவ் டுடே திரைப்படம் ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் ரீச் ஆகிருக்கும். அதனால் தற்போது இந்தியில் உருவாகும் போது பாலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், தமிழில் ஹிட் அடித்ததை போல 100 கோடி வசூலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X