சிம்புவிற்கு பதிலாக கொரோனா குமார் படத்தில் நடிக்கும் லவ் டுடே நாயகன்? விரைவில் அறிவிப்பு!

சென்னை : நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது பத்து தல படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது.

மாநாடு படத்தை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தையும் வெற்றிப்படமாக சிம்பு கொடுத்த நிலையில், தற்போது பத்து தல படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த மஃப்டி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள பத்து தல படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தை வெற்றிப்படமாக கொடுத்த சிம்பு, தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்தப் படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

பத்து தல படத்தில் சிம்பு

பத்து தல படத்தில் சிம்பு

இந்நிலையில் தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த மப்ஃடி படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தில் சிம்புவுடன் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக் உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

தள்ளிப் போன ரிலீஸ்

தள்ளிப் போன ரிலீஸ்

படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டிலேயே பத்து தல படம் ரிலீசாக இருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கொரோனா குமார் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கொரோனா குமார் படத்திலிருந்து விலகல்?

கொரோனா குமார் படத்திலிருந்து விலகல்?

ஆனால் இந்தப் படத்திலிருந்து சிம்பு விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பத்து தல படத்தில் சிம்பு கவனம் செலுத்தி வந்தததால் கொரோனா குமார் படத்தின் இயக்குநர் கோகுல் தற்போது ஆர்ஜே பாலாஜி லீட் கேரக்டரில் நடிக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்கவுள்ளார்.

சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்

சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்

இந்நிலையில் கொரோனா குமார் படத்தில் சிம்புவிற்கு பதிலாக கோமாளி, லவ் டுடே படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வெளியான லவ் டுடே படத்தின்மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள பிரதீப் கொரோனா குமார் படத்தில் நடிக்கவுள்ளது குறித்து விரைவில் வேல்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X