வரதட்சணையும் இல்லை.. திருமண செலவும் இல்லை.. ரம்யா பாண்டியனை திருமணம் செய்த மாப்பிள்ளை!

சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் தனது காதலர் லவல் தவோனை திருமணம் செய்துகொண்டார். இவரின் திருமணம் கங்கை நதிக்கரையில் நடைபெற்ற நிலையில், இவர்களின் திருமணத்திற்கான செலவு, வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

டம்மி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை படத்தில் நடித்த நடிகை ரம்யா பாண்டியன், சினிமாவில் எதிர்பார்த்த அளவிற்கு இடம் கிடைக்காததால், அவ்வப்போது இணையத்தில் போட்டோக்களை வெளியிட்டு வந்தார். இதைத்தொடர்ந்து, மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் தான் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அந்த போட்டோவில் இடையழகை காட்டி, லைக்குகளை பெற்றார். இதன் பலனாக ரம்யாவிற்கு சினிமா வாய்ப்பு வரவில்லை என்றாலும், விஜய் டிவியில் குக் வித் கோமாளி மற்றும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ramya pandian lovel dhawan dowry

நடிகை ரம்யா பாண்டியன்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களைவிட ரம்யா பாண்டியன் சிறப்பாக விளையாடிய போதும் இவரால் டைட்டிலை பெற முடியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமா வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த ரம்யாவிற்கு சூர்யாவின் 2டி என்டர்டென்மண்ட் தயாரித்த ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் பேசப்பட்ட போதும் அடுத்தடுத்து படவாய்ப்பு வரவில்லை. இதைத் தொடர்ந்து, மலையாளத் திரைப்படமான மாலை நேரத்து மயக்கம் படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்தார்.

திருமணம்: இன்ஸ்டாகிராம் குவீனான நடிகை ரம்யா பாண்டியன் யோகா மாஸ்டரான லவல் தவானை ரிஷிகேஷ் கங்கை நதிக்கரையில் திருமணம் செய்த கொண்டார். இதில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதையடுத்து, சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

வரதட்சணை கொடுத்த மாப்பிள்ளை: இந்நிலையில், ரம்யா பாண்டியனின் கணவர் லெவல் தவான் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, லவல் தவான் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், அவர்களின் வழக்கப்படி பெண்கள் வீட்டில் வரதட்சணை வாங்க மாட்டார்களாம், திருமணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளை தான் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்த கொள்ள வேண்டுமாம். இதனால், ரம்யா பாண்டியனின் கணவர் பெரும் தொகையை வரதட்சணையாக கொடுத்து ரம்யா பாண்டியனை திருமணம் செய்து இருக்கிறார். இது மட்டுமில்லாமல், நகை, திருமணத்திற்கான செலவு என அனைத்தையும் ரம்யா பாண்டியனை கரம் பிடித்துள்ளார். இந்த தகவல் ரம்யாவின் அம்மா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள், ரம்யா பாண்டியன் கொடுத்து வைத்தவர் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X