Lover Blue Sattai Review: "எதெல்லாம் இருக்கணுமோ அதெல்லாம் இல்ல..” லவ்வர் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

சென்னை: மணிகண்டன், ஸ்ரீ கெளரி ப்ரியா நடித்துள்ள லவ்வர் திரைப்படம் நேற்று வெளியானது. பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம் 2கே கிட்ஸின் காதலை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லவ்வர் திரைப்படம் எப்படி இருக்கிறது என ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

லவ்வர் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் திரைப்படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் நெகட்டிவான விமர்சனமே கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் கதை குறித்து கூறியுள்ள அவர், ஹீரோவும் ஹீரோயினும் லவ் பண்றாங்க. இவங்க இரண்டு பேருக்கும் நடுவுல அடிக்கடி சின்ன சின்ன சண்டையெல்லாம் பெரிய சண்டையா மாறுது. இதனால் இரண்டு மூன்று முறை பிரேக் அப் கூட ஆகுது, ஆனாலும் மறுபடியும் சேர்ந்துருவாங்க.

Blue Sattai Maran has given a negative review for Lover movie

ஒருகட்டத்துல இவன வச்சி காலம் தள்ள முடியாது, பிரேக் அப் பிரேக் அப் தான் என முடிவு பண்ணி, ஹீரோவ விட்டு விலகி போய்டுறாங்க. இப்ப கடைசியா ஒரு வாய்ப்புக் கொடுன்னு ஹீரோயின நச்சரிக்க ஆரம்பிச்சிடுறார். அதுக்கு அப்புறம் என்ன ஆச்சுங்குறது தான் லவ்வர் படத்தோட கதை என ப்ளூ சட்டை மாறன் விவரித்துள்ளார். இந்தப் படத்தோட ஃபர்ஸ்ட் ஹாஃப் பத்தி ஓஹோன்னு சொல்ல முடியலன்னாலும், ஓரளவுக்கு போர் அடிக்காம படம் போச்சு.

இதுக்கு முக்கியமான காரணமே இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையே கிடையாது. நம்மள சுத்தி நடந்துட்டு இருக்குற உண்மையான விஷயங்கள தான் படமா எடுத்து வச்சிருக்காங்க. ஆனால் இரண்டாம் பாதி முழுக்க ஹீரோ இன்னொரு வாய்ப்பு கேட்டு ஹீரோயின் முன்னாடி போய் நிற்பது தான் கதை. இதை இரண்டாம் பாதி முழுக்க எடுத்து வச்சிருக்காங்க, க்ளைமேக்ஸ் வர அதேதான் தொடருது.

அதுவரை கதை நகரவே இல்லை... முதல் பாதியில் விட்டது அப்படியே தான் இருந்தது. தொடர்ச்சியா ஒரே மாதிரி காட்சிகள் மட்டுமே வரதால ரசிகர்களுக்கே எரிச்சல் வந்துருச்சு. அதுமட்டும் இல்லாம ஒவ்வொரு சீனையும் ரொம்பவே நீளமா எடுத்து வச்சிருக்காங்க. தேவையே இல்லாத சீன்ஸ் கூட ரொம்ப லென்த்தியா இருக்குறது ரசிக்க முடியல என ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.

ஹீரோவோட ஃபேமிலி பேக்ரவுண்ட் தான் படத்தோட முக்கியமான பிரச்சினையே. ஆனா அதுக்கு முக்கியத்துவம் கொடுக்காம படத்த மேம்போக்கா எடுத்து வச்சிருக்காங்க. ஹீரோயினும் ஹீரோவோட அம்மாவும் பேசுற சீன் மட்டும் ரசிக்கும்படியா இருக்குது. தேவை இல்லாத காட்சிகளை அதிகமா எடுத்து வச்சி, தேவையானதை எல்லாம் அப்படியே விட்டுட்டாங்க.

அதேபோல், இந்த மாதிரியான படங்களில் குபீர் சிரிப்பு வர மாதிரி காமெடி சீன்ஸ் இருக்கணும். அதேமாதிரி நறுக்குன்னு நாலு பாட்டு வச்சிருக்கணும், இது இரண்டுமே இல்ல. இதெல்லாம் இருந்தா இந்தப் படம் ரொம்ப நல்லா வந்துருக்கும். சொல்ல வந்தத டூ மச்சா சொல்லி சுமாரான படமா எடுத்து வச்சிருப்பதாக ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த வாரம் லால் சலாம், லவ்வர் படங்கள் மட்டுமே தமிழில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X