Lover vs Lal Salaam Box Office: 2ம் நாள் வசூலில் கெத்துக்காட்டிய லவ்வர்.. சரிந்த லால் சலாம்!

சென்னை: பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீகெளரி பிரியா நடிப்பில் வெளியான லவ்வர் திரைப்படம் முதல் நாளை விட இரண்டாம் நாளில் வசூல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் குறைந்த பட்சம் 100 கோடி வசூலையாவது ஈட்டும் என தியேட்டர் ஓனர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

Lover movie box office slightly increased on day 2 but Lal Salaam decreased


ஆனால், வசூல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவை அந்த படம் சந்தித்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பெரிய படம்: லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த், தன்யா பாலகிருஷ்ணா, அனந்திகா, செந்தில், தம்பி ராமைய்யா, லிவிங்ஸ்டன், கபில் தேவ் என பெரிய ஸ்டார் காஸ்ட் உடன் வெளியான லால் சலாம் திரைப்படம் பட்ஜெட்டும் அதிகம் எனக் கூறுகின்றனர். ரஜினிகாந்தின் கேமியோ படத்தை வேறு ஒரு இடத்துக்கு கொண்டு செல்லும் என பலரும் நம்பிய நிலையில், எண்ட் ரிசல்ட் அப்படி இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காதலர்களை வசீகரித்த லவ்வர்: அதே சமயம் அந்த படத்துடன் சிறிய படமாக போட்டியிட்ட மணிகண்டனின் லவ்வர் திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி காதலர்களை வசீகரித்து வருகிறது. கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என பலரும் தியேட்டருக்கு அந்த படத்தை பார்க்க ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்த வாரம் வெளியான படங்களில் விமர்சன ரீதியாக லவ்வர் சற்றே லால் சலாம் படத்தை முந்தியிருப்பதாக கூறுகின்றனர்.

லவ்வர் 2ம் நாள் வசூல் அதிகரிப்பு: மணிகண்டன் நடிப்பில் குறைந்த பட்ஜெட்டில் உருவான லவ்வர் திரைப்படம் முதல் நாளில் 1 கோடி ரூபாய் வசூலுடன் தொடங்கிய லவ்வர் திரைப்படம் 2ம் நாளில் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக 2 கோடியாக வசூல் அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக 3 கோடி ரூபாய் வசூலை லவ்வர் திரைப்படம் ஈட்டியுள்ளதாக கூறுகின்றனர். ஞாயிற்றுக்கிழமையும் 2 கோடி வசூல் வந்தால் 5 கோடி வசூலை லவ்வர் திரைப்படம் தாண்டும்.

வசூல் சரிவு: ஆனால், லால் சலாம் படத்தின் முதல் நாள் வசூல் 4.3 கோடியாக இருந்த நிலையில், 2ம் நாளில் வெறும் 3 கோடி ரூபாயாக வசூல் சரிவடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகம் முழுவதும் அந்த படத்தை லைகா நிறுவனம் தொடர்ந்து புரமோட் செய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்று வசூல் அதிகரிக்குமா? இல்லையா? என்பது நாளை தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X