Lover Trailer: “இது ஃபர்ஸ்ட் டைம் பிரேக்-அப்பா என்ன..” வெளியானது மணிகண்டனின் லவ்வர் ட்ரெய்லர்!

சென்னை: குட் நைட் திரைப்படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் லவ்வர் படத்தில் இணைந்தது. மணிகண்டன் நடிப்பில் ரொமாண்டிக் ஜானரில் உருவாகியுள்ள லவ்வர் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பிப்ரவரி 9ம் தேதி வெளியாகவுள்ள லவ்வர் படத்துக்கு, இந்த ட்ரெய்லர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளியானது லவ்வர் ட்ரெய்லர்
விக்ரம் வேதா உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியவர் மணிகண்டன். தசெ ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படத்தில் ராஜகண்ணுவாக நடித்து ரசிகர்களை வியக்க வைத்திருந்தார். இதுதவிர பல படங்களில் நடித்துள்ள மணிகண்டன், தற்போது ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். கடந்தாண்டு மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.

 Lover Trailer: Manikandan starrer Lover trailer released now

மினிமம் பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்துக்கு பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இக்கூட்டணி லவ்வர் திரைப்படத்தில் இணைந்துள்ளது. மணிகண்டனுடன் ஸ்ரீ கெளரி ப்ரியா, கண்ணா ரவி, சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 9ம் தேதி ரிலீஸாகிறது.

இதனையடுத்து லவ்வர் படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ரொமாண்டிக் ஜானரில் உருவாகியுள்ள லவ்வர் படத்தில் மணிகண்டனின் நடிப்பு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதலர்களுக்கு இடையேயான ஈகோ, பிரேக்-அப், ரொமான்ஸ் என வழக்கமான காதல் பின்னணி படமாக இருந்தாலும், ரசிகர்களிடம் இது வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், 2கே கிட்ஸ் ரசிகர்களுக்கும் லவ்வர் ட்ரீட்டாக இருக்கும் எனத் தெரிகிறது. லவ்வர் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள சில கெட்ட வார்த்தைகள் கண்டிப்பாக விமர்சனத்துக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கலாம். பிப்ரவரி 9ம் தேதி ரஜினியின் லால் சலாம் படத்துடன் மோதும் லவ்வர், எப்படி வெற்றிப் பெறப் போகிறது என்பது தான் தற்போதைய எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

மணிகண்டன் தொடர்ந்து மினிமம் பட்ஜெட் படங்களில் நடித்து மினிமம் கியாரண்டி ஹீரோவாக கலக்கி வருகிறார். அதன்படி லவ்வர் படத்தின் வெற்றி அவரது கேரியரில் மேலும் பல கதைகளில் ஹீரோவாகும் வாய்ப்பைப் பெற்றுத் தரும் என கோலிவுட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X