அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்.. காதலர் தினத்தை தியேட்டரில் கொண்டாடுங்கள்.. 96 முதல் லவ்வர் வரை!

சென்னை: ஒரு ஆணையும் பெண்ணையும் ஒரு கோட்டுக்குள் கொண்டு வந்து இனிமேல் உனக்கு நான் எனக்கு நீ என சுயநலத்தை தூக்கிப்போட்டு வாழத் தூண்டும் ஓர் உறவு தான் காதல் எனக்கு இருந்த காலமெல்லாம் மாறிப்போய் பாலின பேதங்கள் தாண்டி காதல் என்றுமே காதலாக இரண்டு மனங்கள் இணைந்தால் போதும் என்கிற கோட்பாட்டுடன் பல யுகங்கள் தாண்டி வாழ்ந்து வருகிறது.

காதல் எனும் சொல்லை முன்வைத்து ஏகப்பட்ட தமிழ் சினிமா படங்கள் அந்தக் காலத்தின் காதலிக்க நேரமில்லை முதல் கடந்த வாரம் வெளியான லவ்வர் வரை பல படங்கள் வெளியாகி உள்ளன. இதில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த காதல் படங்கள் இன்று சென்னை தியேட்டர்களில் காதலர் தினக் கொண்டாட்டமாக வெளியாகியுள்ளன.

Lovers Day 2024 special: From 96 to Lover movies will shower love in theaters today

விண்ணைத்தாண்டி வருவாயா: காதல் படங்களின் குருவாகவே கௌதம் மேனன் மாறியுள்ளார். அவர் இயக்கிய முதல் படமான மின்னலே மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று சென்னை திரையரங்குகளில் வெளியாகி உள்ளன. சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா ஒட்டுமொத்த காதலர்களின் ஃபேவரைட் படமாக மாறியுள்ளது. எப்போ அந்த படம் தியேட்டரில் வெளியிட்டாலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இன்றும் பல திரையரங்குகளில் விண்ணைத்தாண்டி வருவாயா வெளியாகியுள்ளது.

விஜய்சேதுபதியின் 96: விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஜெஸ்ஸியாக நடித்து ரசிகர்களை காதலிக்கத் தூண்டிய திரிஷா அதன் பின் பல ஆண்டுகள் கழித்து விஜய் சேதுபதியுடன் இணைந்து ஜானு கதாபாத்திரத்தில் சாதாரண மஞ்சள் நிற சுடிதார் அணிந்து கொண்டு ரசிகர்களை மயக்கிய மாயாஜால காட்சிகள் நிறைந்த 96 படமும் இன்று காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது. நேற்று அதற்காக அந்த படத்தில் நடித்த வர்ஷா பொல்லம்மா, ஆதித்யா பாஸ்கர் எல்லாம் சிறப்பு வீடியோவை வெளியிட்டு படத்தை ப்ரோமோட் பண்ணினர்.

வாரணம் ஆயிரம்: கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, சிம்ரன், ரம்யா, சமீரா ரெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் பாடல்கள் எல்லாமே காதலர்களின் ஃபேவரைட் ஹிட் தான். "அடியே கொல்லுதே முதல் அஞ்சல" பாடல் வரை புரொபஸல் முதல் லவ் பிரேக்கப் ஆனவர்கள் வரைக்கும் அனைத்து ஐட்டங்களும் இந்த படத்தில் உள்ளது. இந்த படமும் சென்னை தியேட்டர்களில் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு ஒரு படம்: இயக்குநர் சித்திக் இயக்கத்தில் விஜய், அசின், ராஜ்கிரண் நடிப்பில் வெளியான காவலன் திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கான காதலர் தின படமாக இன்று வெளியாகி உள்ளது. மேலும், பரத்தின் லவ், ஜீவாவின் சிவா மனசுல சக்தி உள்ளிட்ட படங்களும் வெளியாகி உள்ளன.

லவ்வர் ஓடுது: கடந்த வாரம் லால் சலாம் படத்துக்குப் போட்டியாக ரிலீஸான லவ்வர் திரைப்படமும் காதலர் தினத்தை முன்னிட்டு நல்லா கலெக்‌ஷன் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீகெளரி பிரியா, கண்ணா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை 2கே கிட்ஸ் ரொம்பவே கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X