Hug Day: கட்டிபுடிடா பாடலில் ஓவர் கிளாமர் டான்ஸ்.. இப்போ அவங்க 2 பேரும் என்ன செய்யறாங்கனு பாருங்க

சென்னை: பிப்ரவரி மாதம் வந்துவிட்டால், உலகம் முழுவதும் உள்ள காதலர்களுக்கு செம குஷி ஆகிவிடுவார்கள். தங்களது காதலை கொண்டாட பல வகைகளில் திட்டங்களைத் தீட்டுவார்கள். அப்படி இருக்கும்போது, காதலர் தினம் இன்னும் இரண்டு நாட்களில் கொண்டாடப்படவுள்ளது. இப்படியான நிலையில் இன்று Hug Day கொண்டாடப்படுகிறது. அதாவது கட்டிப்புடி தினம். தமிழ் சினிமா உலகில் கட்டிப்புடி என்றால் பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருவது இரண்டு படங்கள்தான். அதில் ஒன்று, விஜய், ஜோதிகா , மும்தாஜ் நடிப்பில் உருவான குஷி, மற்றொன்று கமல்ஹாசன், பிரபு , சினேகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.

இந்த இரண்டு படங்களும், கட்டிப்பிடிப்பதைப் பற்றி கூறப்பட்டிருக்கும். இதில் வசூல்ராஜா படத்தில், சோர்வாக உள்ளவர்கள், நம்பிக்கை இல்லாமல் இருப்பவர்களை கட்டிப்பிடித்து, அன்பைப் பரிமாறினால், நம்பிக்கை இல்லாமல் உடைந்து போய் உள்ளவர்களுக்கு, புதுத் தெம்பினைக் கொடுக்கும் என கூறப்பட்டிருக்கும். இது தொடர்பான காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Lovers day 2025 Hug Day Vijay Mumtaj 2025

கட்டிப்புடி: ஆனால் குஷி படத்தில் இடம்பெற்ற கட்டிப்புடி என்பது பாடல். இன்றைக்கு மோஸ்ட் கிளாமர் தமிழ் பாடல்களில் இந்தப் பாடலுக்கு இடம் உள்ளது. பல பாடல்கள் இந்தப் பாடலுக்குப் பின்னர் உருவாக்கப்பட்டிருந்தாலும், இந்தப் பாடலின் அளவிற்கு பாடல் வரிகளாகவும், நடன அசைவுகளாகும், காட்சிப்படுத்திய விதமாகவும் இந்தப் பாடலை ஓரம் கட்டக்கூடிய கிளாமரான பாடல் வரவில்லை. இந்தப் பாடலில் விஜய் மற்றும் மும்தாஜ் நடனமாடி இருப்பார்கள். இவர்களது நடனம் பாடலின் தன்மைக்கு ஏற்றவாறு ஓவர் கிளாமராகவே இருந்தது. இந்தப் பாடல் காட்சியாக மட்டும் இல்லாமல், ஆடியோவாகவுமே கிளாமரான பாடலாக உருவாக்கப்பட்டது.

விஜய்: இந்தக் கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலில் கிளாமர் ஆட்டம் போட்ட விஜய் மற்றும் மும்தாஜ் சினிமாவில் இருந்து விலகி விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும். இதில் விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக விஜய் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும், அவர் அரசியலுக்கு வரவேண்டும் என நினைத்த பலருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அடுத்த ஆண்டு காதலர் தினம் வரும்போது விஜய் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகியிருப்பார். விஜய் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்து நிற்கிறார்.

Lovers day 2025 Hug Day Vijay Mumtaj 2025

மும்தாஜ்: அதேபோல் கட்டிப்புடிடா பாடலில் நடித்த நடிகை மும்தாஜ், சினிமாவில் இருந்து எப்போதோ விலகிவிட்டார். இவர் தற்போது, ஆன்மீகத்தில் இறங்கிவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, என்னால், நான் கிளாமராக நடித்த படங்களை எனது வீட்டு ஹாலில் அமர்ந்து எனது, குடும்பத்தினருடன் பார்க்க முடியவில்லை, என வருத்தமாக தெரிவித்திருந்தார். தான் இறந்துவிட்டால் கூட, எனது கிளாமரான புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம் என ஒரு பேட்டியில் கூறினார். கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலில் செம கிளாமர் ஆட்டம் போட்ட விஜய் மற்றும் மும்தாஜ் என இருவரும், சினிமாவில் இருந்து விலகியது பேசு பொருளாக மாறியுள்ளது. பாடலுக்கு இசை அமைத்த தேவாவையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X