Promise Day: சூப்பர் ஸ்டார் முதல் லேடி சூப்பர் ஸ்டார் வரை.. காதலோடு வாழ்க்கையிலும் வென்ற 5 ஜோடிகள்!

சென்னை: காதலர் தினம் பிப்ரவரி 14ஆம் தேதி என்றாலும், காதலையும் காதலர்களையும் கொண்டாட காதலர் தினத்திற்கு முன்னர் இருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினமாக பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்றைக்கு அதாவது பிப்ரவரி 11ஆம் தேதி, பிராமிஸ் டே கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் இருந்த பிரபலங்கள் தங்களது காதலோடு சேர்த்து வாழ்க்கையிலும் வென்ற 5 பிரபலங்களை இந்தத் தொகுப்பில் காணலாம்.

ரஜினிகாந்த் - லதா: இந்த 5 ஜோடிகளில் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - லதா ஜோடி குறித்து பார்க்கலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, தனது கல்லூரி பயிற்சிக்காக பேட்டி எடுக்கச் சென்ற லதாவுக்கு அவர் மீது விருப்பமும் காதலும் ஏற்பட்டது. அதேபோல் ரஜினிகாந்த்துக்கும் காதல் ஏற்பட, இருவரும் தங்களது திருமணத்தை நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக செய்து கொண்டனர். கடந்த 1981ஆம் ஆண்டு காதலர் தினம் முடிந்து இரண்டு நாட்களில் இவர்களது திருமணம் நடைபெற்றது. அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி இவர்கள் திருமணம் நடைபெற்றது. அன்று முதல் இருவரும் தங்களின் சுக துக்கங்களை பகிர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

Rajinikanth Suriya Ajithkumar

அஜித் - ஷாலினி: அதேபோல் மற்றொரு ஜோடி என்றால் அது அஜித் ஷாலினி. இவர்கள் இருவரும் இணைந்து அமர்க்களம் படத்தில் நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டது, இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Rajinikanth Suriya Ajithkumar

சூர்யா - ஜோதிகா: மற்றொரு காதல் ஜோடி சினிமாவில் மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் செம ரொமான்டிக் ஜோடிதான். சூர்யா - ஜோதிகா தான் அந்த ஜோடி. இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர். குறிப்பாக திருமணத்திற்கு முன்னர் காக்க காக்க, மாயாவி,பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, பேரழகன் என பல படங்களில் நடித்தனர். இவர்களது தொழில் ரீதியான பழக்கம் இவர்களுக்கு இடையில் காதலை ஏற்படுத்த, இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Rajinikanth Suriya Ajithkumar

சினேகா - பிரசன்னா: இந்தப் பட்டியலில் அடுத்து உள்ள ஜோடி செம க்யூட்டான ஜோடி. சினேகாவும் பிரசன்னாவும் தான் அந்த ஜோடி. இருவரும் 2009 ஆம் ஆண்டு வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்திருந்தனர். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போக இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விஹான் மற்றும் அத்யாந்தா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Rajinikanth Suriya Ajithkumar

விக்கி நயன்: இந்த பட்டியலில் ஐந்தாவது இடம் இருப்பவர்கள் என்றால் அது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் தான். இவர்கள் இருவரும் தமிழ் திரையுலகில் பலரும் பார்த்து பொறாமைப்படும் காதல் தம்பதியர்களாக உள்ளனர். விக்னேஷ் சிவனின் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த நயனுக்கு விக்கியை பிடித்துப்போக, இருவரும் சில ஆண்டுகள் காதலில் இருந்து விட்டு கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஆனால் அதற்கு முன்னரே இருவரும், பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டனர். அதாவது உயிர் மற்றும் உலக் என இரண்டு குழந்தைகளை இவர்கள் பெற்றுக் கொண்டனர். மேற்குறிப்பிட்ட இந்த ஐந்து காதல் ஜோடி தம்பதிகள் தங்களது காதலர்களுக்கும் காதலுக்கும் அவர்கள் செய்து கொடுத்த சத்தியத்தை பின் பற்றி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

Rajinikanth Suriya Ajithkumar

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X