twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தரமான குறைந்த பட்ஜெட் படங்களுக்கு அரசு மானியம் அறிவிப்பு

    |

    சென்னை: தமிழ்நாடு அரசு திரைப்படத்துறைக்கு மானியம் ஒன்றினை வழங்கவுள்ளது. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான திரைப்படங்களுக்கு ரூ. 7லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.

    கடந்த 2015, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் வெளியான குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட முழு நீள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அவற்றிக்கு மானியம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    Low budget films subsidy by TN govt

    இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நவம்பர் 29ம் தேதிக்குள் திரைப்படங்கள் குறித்த தகவல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதனோடு சேர்த்து ரூ. 100 வரவோலை எடுத்து அனுப்பிவைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தேர்ந்தெடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தமிழக அரசாங்கம் ரூ. 7 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

    மேலும் தென்னிந்திய திரைப்பட தொழி‌லாளர்கள் சம்மேளனத்தின் தலை‌வரான ஆர். கே. செல்வமணி மற்றும் இயக்குநர் சங்க நிர்வாகிகளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை குறைக்க‌ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்திய அளவில் ட்ரென்டிங்கில் டாப்.. குதூகலிக்கும் ரசிகப் பெருமக்கள்! #வாழ்நாள்சாதனையாளர்ரஜினிஇந்திய அளவில் ட்ரென்டிங்கில் டாப்.. குதூகலிக்கும் ரசிகப் பெருமக்கள்! #வாழ்நாள்சாதனையாளர்ரஜினி

    அரசின் இந்த மானியம் நிச்சயம் திரையுலகில் குறைந்த செலவில் தயாரிக்கும் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு ஒரு ஊக்குவிப்பாக இருக்கும். மேலும் பலர் இனி வரும் காலங்களில் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் எடுக்க முன்வருவார்கள்.

    English summary
    Tamilnadu government has issued a subsidy notice to provide 7lakhs for quality low buget films released in 2015 -2017. Filled forns has to be submitted before November 29th.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X