என்னது கமல்ஹாசனோடு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கை குலுக்கினாரா?

கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்துக்கான போஸ்டர் ஒன்றில் 'கலையுலக போராளி கமல்ஹாசன் என்று குறிப்பிட்டு 'மீசை இல்லாத கமலும் மீசை இல்லாத பிரபாகரனும்' கை குலுக்குவது போன்ற படமும் இடம்பெற்றுள்ளது. மேலும் அதில் தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த போஸ்டருக்குத் தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. பிரபாகரனை கமல்ஹாசன் நேரில் சந்தித்ததே இல்லை. போலியான போட்டோ மூலம் விளம்பரம் தேடுவதற்காக கமல்ஹாசன் ரசிகர்கள் இந்த போஸ்டரை ஒட்டியிருக்கின்றனர் என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
Comments


Click it and Unblock the Notifications