Swasika: நம்ம கெத்து பொண்டாட்டி.. ஹரீஸ் கல்யாண் மாமியாருக்கு பிறந்த நாள்.. சுவாசிகா சீக்ரெட்கள் இதோ!
சென்னை: கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாக லப்பர் பந்து படத்தில் அட்டக்கத்தி தினேஷ்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சுவாசிகா. இவர் தனது அட்டகாசமான நடிப்பினால் ரசிகர்களின் மனதினை ஆட்கொண்டுவிட்டார் என்றே கூறலாம். தான் ஏற்று நடித்த யசோதை கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். படத்தின் முதல் காட்சியில் இருந்து க்ளைமேக்ஸ் காட்சி வரை இவரது கதாபாத்திரம் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டது. இதனால் இவரை ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத நிலைக்கு கொண்டு சேர்த்தது. இந்நிலையில் இன்று அவர் தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவர் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

நடிகர் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் கதாநாயகர்களாக நடித்து வெளியான படம் லப்பர் பந்து. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் கிராமங்களில் விளையாடப்படும் லப்பர் பந்து கிரிக்கெட்டினை மைய்யமாகக் கொண்ட கதை. இப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழரசன் பச்சமுத்து அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், சுவாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். சான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.

படம் விமர்சன ரீதியாக வெற்றியை எட்டியது மட்டும் இல்லாமல், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிப்படமாக மாறியது. ஹரீஸ் கல்யாண் அன்பு கதாபாத்திரத்திலும், அட்டக்கத்தி தினேஷ் கெத்து கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். படத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. படம் முழுக்க தினேஷ் மற்றும் ஹரீஸ் கல்யாணுக்கு இடையிலான ஈகோ பிரச்னையை மட்டும் காட்டி வழக்கமான ஹீரோ சென்ட்ரிக் படமாக மட்டும் இல்லாமல், படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நல்ல அழுத்தம் திருத்தமான திரைக்கதை அமைத்து படம் பார்த்த அனைவருக்கும் திருப்திகரமான எண்ணத்தை உருவாக்கிவிட்டனர்.

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுவாசிகா குறித்து இணையத்தில் வேகமாக பரவிய செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதாவது சுவாசிகாவுக்கு ஹரீஸ் கல்யாணை விட வயது குறைவு. அப்படி இருந்தும், ஹரீஸ் கல்யாணின் மாமியாராக நடித்து அசத்தியிருந்தார். படக்குழு ரசிகர்களை தியேட்டரில் சந்தித்தபோதுகூட, கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர், 'மைக்கை அம்மாக்கிட்ட கொடு அண்ணா’ எனக் கத்தினார். இதைக் கேட்டதும் ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தது. குறிப்பாக சுவாசிகா தனது கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஈர்ப்பினை ஏற்படுத்தியுள்ளதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

தாக்கம்: சுவாசிகா கேரளாவின் எர்னாகுளம் பகுதியைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் பூஜா விஜய். நடிப்பிற்காக தனது பெயரை சுவாசிகா என மாற்றி வைத்துக் கொண்டார். இவர் தொடக்கத்தில் தனது திரை வாழ்க்கையை தமிழில் இருந்து தொடங்க நினைத்து பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் எதுவும் ஒர்க் அவுட் ஆகாததால், மலையாளத்தில் நடிக்கச் சென்றுவிட்டார். லப்பர் பந்து அவருக்கு ஒரு பெரும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றாலும், இதற்கு முன்னர் இவர் தமிழில் நடித்த படங்களில் அப்படியான தாக்கம் ஏற்படவில்லை. மலையாளப் படங்களில், வெப் சீரீஸ்களில் சப்போர்டிங் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். மிகவும் அழுத்தம் திருத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் மிகவும் கவனமாக உள்ளார்.

லிஸ்ட்: இதுவரை தமிழ் மற்றும் மலையாளம் என மொத்தம் 40 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் தனது திரை வாழ்க்கையை சின்னத்திரையில் இருந்து தொடங்கியவர் ஆவார். இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலான, நீதான் காதல் தொடரில் நாயகனாக நடித்து வரும் பிரேம் ஜேக்கப் என்பவரை காதலித்து வருகின்றார். இருவரது காதலுக்கும் இருவீட்டரும் சம்மதம் தெரிவித்துவிட்டனர்.

காதல்: இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது என கூறப்படுகின்றது. இருவரும் தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் வெளியில் எங்காவது சென்று லூட்டி அடித்து வருகின்றனர். அண்மையில்கூட மாலத்தீவுக்குச் சென்றிருந்தனர். அதன் புகைப்படங்களையும் தங்களது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். சுவாசிகாவைப் பொறுத்தவரையில் அவரது இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் ரசிகர்கள் பின் தொடருகின்றனர். இவர் இதுவரை 2,500க்கும் அதிகமான போஸ்ட்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இன்று அவர் தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











