மாலத்தீவில் கணவருடன் செம ரொமான்ஸ்.. லப்பர் பந்து நடிகையின் அட்ராசிட்டி.. கெத்து பொண்டாட்டியா இப்படி?

சென்னை: அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை தான் சுவாசிகா. அந்த படத்தில் தினேஷூக்கு மனைவியாகவும் திருமண வயதில் இருக்கும்பெண்ணுக்கு அம்மாவாகவும் நடித்திருந்தார். இளமையான நடிகையான இவர் தனது கணவருடன் மாலித்தீவில் இருக்கும் செம ரொமான்சான போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்

நடிகை சுவாசிகா 2009 ஆம் ஆண்டு தமிழில் வெளியான வைகை என்ற திரைப்படத்தில் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் விசாகா என்ற பெயரில் அறிமுகமானார். விசாகா என்ற பெயர் ராசி இல்லாததால், தனது பெயரை சிவாசிகா என்று மாறிக்கொண்டார். இதைத்தொடர்ந்து கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழில் படங்கள் இல்லாததால் மலையாள சினிமா பக்கம் சென்றார்.

lubber pandhu swasika photo

லப்பர் பந்து: மலையாளத்தில் Aaraattu, Vasanthi, kumari, Vivekanandan Viralaan என அடுத்தடுத்த படத்தில் நடித்துள்ளார்.இவர் மீண்டும் தமிழுக்கு வந்து, தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான லப்பர் பந்து படத்தில் நடித்தார். அந்த படத்தில், அட்டக்கத்தி தினேஷூக்கு மனைவியாக நடித்திருந்தார். படத்தில் மற்றொரு நடிகை சஞ்சனா நடித்திருந்தாலும், நடிகை சுவாசிகாவிற்கு தான் அழுத்தமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

காதல் திருமணம்: 'லப்பர் பந்து' படத்தின் மூலம் தமிழில் முதல் வெற்றியை ருசித்து சிவாசிகாவிற்கு கடந்த ஜனவரி மாதம் பிரேம் ஜேக்கப் என்பவருடன் திருமணம் நடந்தது. இருவரும் சீரியல் ஒன்றில் இணைந்து பணியாற்றியபோது காதலித்து பின்னர் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

lubber pandhu swasika photo

கெத்து பொண்டாட்டிய இப்படி: இந்நிலையில், இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் சிவாசிகா, சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய லப்பர் பந்து படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், மாலத்தீவுக்கு சுற்றுலான சென்றுள்ளார். அங்கு தனது காதல் கணவருடன் மிக நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் கெத்து பொண்டாட்டிய இப்படி என்றும், பாவம் நம்ம கெத்து என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த ரொமான்டிக் போட்டோஸ் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X