அடேங்கப்பா... சிக்ஸர் அடிக்கும் லப்பர் பந்து வசூல்..குவியும் பாராட்டு!
சென்னை: அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள படம் லப்பர் பந்து.தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில் சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் நான்காம் நாள் வசூல் குறித்து இப்போது பார்க்கலாம்.
ஓவியரான அட்டக்கத்தி தினேஷ் உள்ளூரில் நடைபெறும் ரப்பர் பந்து கிரிக்கெட் போட்டிகளில் அதிரடி ஆட்டக்காரர். எங்கு கிரிக்கெட் போட்டி நடந்தாலும் ஆஜராகிவிடுவார். அதே ஊரில் பந்துவீச்சில் அட்டக்கத்தி தினேஷை திணறடிக்கிறார் ஹரிஷ் கல்யாண். இதனால், இருவருக்கும் ஈகோ வளர்கிறது. இதற்கிடையே தினேஷின் மகள் சஞ்சனாவிற்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் காதல் மலர்கிறது. கிரிக்கெட் ஈகோவால் வளர்ந்த பகைக்கும் காதலுக்கும் இடையே என்னென்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கதை.

லப்பர் பந்து: 40 வயதிலும் வெறித்தனமாக கிரிக்கெட் விளையாடுவது, ஒரு பார்வையிலேயே காதல் மலர்வது என ரசனையோடு கதையை நகர்த்தி இருக்கிறார் படத்தின் இயக்குநர். 'அட்டக்கத்தி' தினேஷுக்கு அழகான கதாபாத்திரம். அதைச் சரியாகப் பயன்படுத்தி சதம் அடித்திருக்கிறார். அதேபோல பாலசரவணன், ஜென்சன் திவாகரும் உதவியிருக்கிறார்கள். காளி வெங்கட், தேவதர்ஷினி, டிஎஸ்கே, கீதா ஆகியோரும் தங்களின் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்
படத்தின் வசூல்: 20ந் தேதி பலத் திரைப்படங்கள் வெளியாகின. இதில், ஆரவாரமே இல்லாமல் வெளியானத் திரைப்படம் தான் லப்பர் பந்து. இந்த படத்திற்கு மக்களிடம் இருந்த நல்ல விமர்சனம் வந்ததை அடுத்து, படக்குழுவினரும் விளம்பரப்படுத்த தொடங்கினார்கள். இந்தப் படத்தின் தமிழக உரிமை ரூ.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பதால், படக்குழுவினரும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
4 நாள் வசூல்: இதனால் படத்தின் வசூல் முதல் நாளை விட 2-ம் நாள் இரண்டு மடங்காக அதிகரித்தது. மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை 2.15 கோடியை வசூலித்தது. நேற்று வேலை தினமாக இருந்த போதும் படம் கணிசமான வசூலை அள்ளி 5 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டி உள்ளது. இப்படம் உலக அளவில், 5.25 கோடியை வசூலித்துள்ளாக வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், படம் மேலும் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











