ஹவுஸ்மேட்ஸ் கண்டிப்பா ஹிட்டு.. லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து உறுதியா சொல்லிட்டாரே!
சென்னை: சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் தாங்கள் நடித்த படங்களுக்கே ப்ரோமோஷன் செய்ய மாட்டோம் என வெட்டி பந்தா காட்டி வரும் நிலையில், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து நாளை வெளியாகும் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 'ஹவுஸ்மேட்ஸ்' திரைப்படம் கண்டிப்பாக ஹிட் ஆகும் என ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன், காளி வெங்கட், வினோதினி மற்றும் அர்ஷா சாந்தினி பைஜு நடிப்பில் உருவாகியுள்ள ஹவுஸ்மேட்ஸ் திரைப்படம் நாளை திரையரங்குகளில் பலத்த போட்டியுடன் வெளியாகிறது.

இந்த வாரம் ஒட்டுமொத்தமாக 10 படங்கள் ரிலீஸ் ஆகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் டிவி புகழ் நடித்துள்ள மிஸ்டர் ஜூ கீப்பர், அக்யூஸ்ட், டிஜே அருணாச்சலம் நடித்துள்ள உசுரே உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. பல சிறு பட்ஜெட் படங்களும் நாளை வெளியாகின்றன.
சிவகார்த்திகேயன் தயாரிப்பு: பிரஸ் ஷோ மற்றும் செலிபிரிட்டி ஷோ என ஹவுஸ்மேட்ஸ் படத்தின் ப்ரீமியர் காட்சிகளை சிவகார்த்திகேயன் திரையிட்டு காட்டிய நிலையில், பத்திரிகையாளர்களும், பிரபலங்களும் ஹவுஸ்மேட்ஸ் படத்தை பாராட்டி வருகின்றனர். ஒரு சுவருக்கு இந்த பக்கம் ஒரு குடும்பம், அந்த பக்கம் ஒரு குடும்பம் இவர்கள் இடையே நடக்கும் ஃபேண்டஸி டிராமா என புதிய ஜானரில் படத்தை இயக்கியுள்ளனர். காளி வெங்கட், தர்ஷன், வினோதினி மற்றும் அர்ஷா என அனைவரும் தங்களது நடிப்பால் செம ஸ்கோர் செய்துள்ளனர். ஹீரோவாக ஒரு பக்கம் நடித்து பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொடுத்து வந்தாலும், புதிய இயக்குநர்களுக்கு சினிமாவில் பெரிய இடத்தை கொடுக்க வேண்டும் என தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து தயாரித்து வருகிறார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.
லப்பர் பந்து இயக்குநர் பாராட்டு: சோஷியல் மீடியாவில் நாளை ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக காத்திருக்கும் ஹவுஸ்மேட்ஸ் படத்துக்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், லப்பர் பந்து படத்தின் இயக்குநரான தமிழரசன் பச்சமுத்து தனது எக்ஸ் பக்கத்தில், "ஹவுஸ்மேட்ஸ் திரைப்படம் கண்டிப்பா ஹிட் அடிக்கும் சிறப்பாக எழுதப்பட்ட தனித்துவமான படமாக தமிழ் சினிமாவில் இந்த படம் ஜெயிக்கும் என வாழ்த்தியுள்ளார். தர்ஷன் மற்றும் காளி வெங்கட் அய்யா கலக்கிட்டீங்க, கிளைமேக்ஸ்ல கண் கலங்க வச்சீட்டிங்க, சிவகார்த்திகேயன் சார்க்கு ரொம்ப பெரிய நன்றி, மீண்டும் ஒரு அறிமுக இயக்குநருக்கும் நல்ல திறமைக்கும் வாய்ப்பு கொடுத்ததற்கு என பாராட்டு மழை பொழிந்துள்ளார்.

அடுத்து தனுஷ் படம்: லப்பர் பந்து வெற்றிக்குப் பிறகு தமிழரசன் பச்சமுத்து அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் நிலையில், அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி, மாரி செல்வராஜ் மற்றும் லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்டோர் வரிசையில் காத்திருக்கின்றனர். தொடர்ந்து சக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் தனது முழு ஆதரவை வழங்கி வருகிறார் தமிழரசன் பச்சமுத்து என்பது அவருடைய நல்ல மனதை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications











