காமம், குரோதம், வெட்டுக்குத்து இல்லாத ஒரு நல்ல படம்.. லப்பர் பந்து பாருங்க.. வெங்கடேஷ் பட் சிபாரிசு!

சென்னை: பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் ட்ரோல் செய்யப்படுவதும் குறைவான பட்ஜெட்டில் ரசிகர்களை திருப்திப்படுத்தக் கூடிய படங்கள் வருவதும் தொடர்ந்து நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான வாழை படத்தை தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த நிலையில், அடுத்ததாக கடந்த வாரம் வெளியான லப்பர் பந்து படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஸ்டார் படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க முடியாமல் போனால் என்ன அதை விட தரமான படமாக அவருக்கு லப்பர் பந்து படம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு பார்க்கிங் படத்தைக் கொடுத்து ரசிகர்களை ஹேப்பியாக்கிய ஹரிஷ் கல்யாண் இந்த ஆண்டு லப்பர் பந்து படத்தின் மூலம் சிக்ஸர் அடித்திருக்கிறார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

lubber pandhu venkatesh bhatt review

வெறும் பாராட்டுக்களுடன் நிற்காமல் படத்தை கட்டாயம் தியேட்டருக்குச் சென்று பாருங்கள் என பல பிரபலங்கள் சிபாரிசும் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் நடுவரான வெங்கடேஷ் பட் தற்போது வெளியிட்டு இருக்கும் வீடியோ ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் டிவி டு சன் டிவி: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 4 சீசன்களாக நடுவராக பங்கேற்று வந்த வெங்கடேஷ் பட் இந்த சீசனில் பங்கேற்கவில்லை. சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிக்கு நடுவராக மாறினார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடைசியில் மணிமேகலை, பிரியங்கா சண்டை மிகப்பெரிய அதிர்வலைகளை எழுப்பிய நிலையில், மணிமேகலைக்கு ஆதரவாகவும் வெங்கடேஷ் பட் கருத்து தெரிவித்திருந்தார்.

லப்பர் பந்து பாருங்க: பெரிதாக தியேட்டருக்குச் சென்று படங்களை எல்லாம் பார்ப்பது கிடையாது. மனைவியின் சிபாரிசின் பேரில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான லப்பர் பந்து படத்தை பார்த்தேன். ரொம்பவே நல்ல படம். ஒரு நிமிடம் கூட போர் அடிக்காமல் எடுத்துக் கொண்ட கதையை சிறப்பாக கையாண்டு ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளனர். கட்டாயம் படத்தை தியேட்டருக்குச் சென்று பாருங்கள் என வீடியோ போட்டுள்ளார் வெங்கடேஷ் பட்.

காமம், குரோதம் இல்லை: பொதுவாகவே சமீப காலமாக வெளியாகும் படங்களில் பல லிட்டர் கணக்கில் ரத்தம் சொட்டுவதும், ஏகப்பட்ட துப்பாக்கி புல்லட்டுகள் சிதறிக் கிடப்பதும் தான் படமாகவே உள்ளன. ஆனால், லப்பர் பந்த் படத்தில் காமம், குரோதம், வெட்டுக்குத்து என எதுவுமே இல்லை. ஈகோ இல்லாமல் வாழ்ந்தால் வாழ்க்கை எப்படி அழகாக மாறும் என்பதை இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து அழகாக இயக்கியிருக்கிறார் என படத்தை வெங்கடேஷ் பட் வெகுவாக பாராட்டியுள்ளார்.

லப்பர் பந்து வசூல்: கடந்த வாரம் சுமார் 6 படங்களுடன் போட்டியாக வெளியான லப்பர் பந்து திரைப்படம் மற்ற படங்களை ஓவர்டேக் செய்து விட்டு திரையரங்குகளில் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் குறைக்கப்பட்ட நிலையில், லப்பர் பந்து படத்துக்கு கூடுதல் காட்சிகள் மற்றும் தியேட்டர்கள் கிடைத்து வருகின்றன. இதுவரை அந்த படம் 7 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 30 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X