Lubber Pandhu X Review: 5க்கு 4 மார்க்.. சிக்ஸருக்கு பறந்த லப்பர் பந்து.. ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான பார்க்கிங் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக மாறியது. கவின் நடித்த ஸ்டார் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் தான் ஹீரோவாக நடித்திருக்க வேண்டும். ஆனால், சில பல காரணங்களால் அவருக்கு பதிலாக கவின் நடித்திருந்தார். அந்த படமும் இந்த ஆண்டு 20 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியது.

பார்க்கிங் படத்தைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் பல படங்களில் நடித்து வருகிறார். செப்டம்பர் 20ம் தேதியான நாளை அவர் நடித்துள்ள லப்பர் பந்து வெளியாகிறது. அந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்ட நிலையில், படத்தை பார்த்த பலரும் சோஷியல் மீடியாவில் படத்தை பாராட்டி வருகின்றனர்.

lubber pandhu review harish kalyan

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு இணையாக முக்கிய கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷ் தனது தேர்ந்த நடிப்பில் மிரட்டி எடுத்துள்ளார். இந்த படத்துக்கு 5க்கு 4 மார்க் கொடுக்கலாம் என பத்திரிகையாளர்கள் மற்றும் படத்தை பார்த்த பிரபல விமர்சகர்கள் பலரும் ட்வீட் போட்டுள்ள நிலையில், அதையெல்லாம் இங்கே பார்க்கலாம் வாங்க..

லப்பர் பந்து விமர்சனம்: நான் உறுதியா சொல்றேன் இந்த 2024ம் ஆண்டின் சிறந்த படமாக லப்பர் பந்து இருக்கும். அந்தளவுக்கு ஸ்க்ரிப்ட் எழுதப்பட்டு திரையில் திரைப்படமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இயக்குநர் தமிழ் மற்றும் மொத்த படக்குழுவுக்கே வாழ்த்துகள் என இந்த நெட்டிசன் ட்வீட் போட்டுள்ளார்.

lubber pandhu review harish kalyan

5க்கு 4 மார்க்: அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இடையே வரும் ஈகோ மோதல்கள் தான் படத்தின் ஹைலைட்டே. ஒரு போரான காட்சி கூட இல்லை. படம் தரமாக உள்ளது. சஞ்சனா, ஸ்வஸ்திகா இருவருமே சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசை வேறலெவல். கண்டிப்பாக இந்த படத்துக்கு 5க்கு 4 மார்க் கொடுக்கலாம் என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

lubber pandhu review harish kalyan

ரமேஷ் பாலா விமர்சனம்: சோஷியல் மீடியாவில் பாக்ஸ் ஆபிஸ் கணிப்புகளை கூறி வரும் ரமேஷ் பாலா இந்த படத்தை பார்த்து விட்டு இந்த ஆண்டின் மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என பதிவிட்டுள்ளார். கிரிக்கெட், ரொமான்ஸ், ஃபேமிலி, காமெடி மற்றும் மெசேஜ் என அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் அழகாக அடுக்கப்பட்டு கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். பார்க்கிங் படத்தை போலவே இந்த படத்திலும் ஈகோ கிளாஷ் மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள நிலையில், ஹரிஷ் கல்யாண் இறங்கி சிக்ஸர் அடித்துள்ளார் என்றே பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வெள்ளிக்கிழமை 7 தமிழ் படங்கள் வெளியாகவுள்ள நிலையில், லப்பர் பந்து அதிகம் ஸ்கோர் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

lubber pandhu review harish kalyan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X