Don't Miss!
- Finance
சீனாவின் டாப் 5 ஆன்லைன் மோசடி இவைதான்.. இந்தியாவுக்கும் ஒத்துப்போகும்.. கண்டிப்பாக படிங்க!
- News
90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது! மழை பெய்தால் கூட திராவிடமாடல் தான் காரணமாம்! அண்ணாமலை காட்டம்
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் இணைந்தது லூசிபர் கூட்டணி... வெளியானது "ப்ரோ டாடி" கலக்கலான டீசர்
சென்னை: லூசிபர் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ப்ரோ டாடி என்ற படத்தின் கலகலப்பான டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக இருக்கும் பிரித்விராஜ் இப்பொழுது இயக்குனராக படங்களை இயக்கி வருகிறார்.
இந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
லூசிபர் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ப்ரோ டாடி என்ற படத்தின் கலகலப்பான டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
கலர்ஸ் டிவியில் புதிய தொடர்...பெண்கள் மனம் கவருமா வள்ளி திருமணம்?

இயக்குனராகவும் அறிமுகமாகி
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள பிரித்விராஜ் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடித்த மொழி திரைப்படம் இங்கு பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இப்போது மலையாளத்தில் மட்டும் முழு கவனத்துடன் நடித்து வருகிறார். எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பிரித்விராஜ் இப்பொழுது இயக்குனராகவும் அறிமுகமாகி உள்ளார்.

லூசிபர்
அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் என்ற படத்தை இயக்கி மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதுவரை நடிகராக பிரித்விராஜை பார்த்த அனைவரும் வியக்கும் அளவிற்கு லூசிபர் படத்தை இயக்கி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.

தெலுங்கில் ரீமேக்
அரசியல் கலந்த ஆக்ஷன் திரில்லர் கதை களத்தில் உருவான லூசிபர் திரைப்படம் திரைப்படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியார், டொவினோ தாமஸ்,விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்
இடத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து இந்த திரைப்படம் இப்போது தெலுங்கில் உருவாகி வருகிறது. தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு காட்பாதர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ப்ரோ டாடி
இவ்வாறு முதல் இயக்கத்திலேயே அசத்திய பிரித்விராஜ் இப்பொழுது மீண்டும் மோகன்லாலுடன் இணைந்து புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த முறை சற்று வித்தியாசமான கலகலப்பான குடும்ப படத்தை பிரித்விராஜ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ப்ரோ டாடி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
முழுக்கமுழுக்க ஹைதராபாத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனாவும், பிரித்திவிராஜுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளனர். மேலும் கௌரி கிஷான், லாலு அலெக்ஸ், முரளி கோபி, கனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கலகலப்பான குடும்ப சென்டிமென்ட் படமாக தயாராகிவரும் ப்ரோ டாடி படத்தை
ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்து உள்ளார்.

அட்டகாசமான டீசர்
படபிடிப்பு மொத்தமாய் முடிந்து தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க இப்பொழுது ப்ரோ டாடி படத்தின் அட்டகாசமான டீசர் வெளியாகி இணையதளத்தை கலக்குகிறது.இதில் நடிகர்களின் பெயர்களுடன் கூடிய கதாபாத்திரம் பற்றிய விவரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாகிறது.