நல்ல வேளை எனக்கு ஃபாரின் பாய் ஃபிரன்ட் இல்ல.. தப்பிச்சேன்டா சாமி.. சர்ச்சை நடிகை நிம்மதி பெருமூச்சு

சென்னை: தனக்கு வெளிநாட்டு பிரன்ட் இல்லாததால் தான் கொரோனாவில் இருந்து தப்பியதாக சர்ச்சை நடிகை தெரிவித்துள்ளார்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை ஸ்ரீரெட்டி. சினிமாவில் தனக்கு வாய்ப்பு வழங்குவதாக கூறி பலரும் தன்னை படுக்கைக்கு பயன்படுத்தி கொண்டதாக புகார் கூறினார்.

இயக்குநர்களும் நடிகர்களும் தன்னை ஏமாற்றியதாக கூறி நடு ரோட்டில் அமர்ந்து அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். இதனால் இந்தியா முழுக்க பிரபலமானார் ஸ்ரீரெட்டி.

ரெட்டியின் டைரி

ரெட்டியின் டைரி

தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் பிரபலங்கள் பலரையும் சாடி வருகிறார். தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரையும் வெளுத்து வாங்கி வருகிறார். ஸ்ரீரெட்டி தற்போது ரெட்டியின் டைரி உள்ளிட்ட 2 படங்களில் நடித்து வருகிறார்.

வம்பிழுக்கும் ஸ்ரீரெட்டி

வம்பிழுக்கும் ஸ்ரீரெட்டி

தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள ஸ்ரீரெட்டி தனது கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அதோடு பவன் கல்யாண், விஷால் என வம்பிழுத்து போஸ்ட்டுகளையும் பதிவிட்டு வருகிறார். அதோடு நடிகைகளையும் விட்டு வைக்காமல் வம்பிழுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார் ஸ்ரீரெட்டி.

படுக்கைக்கு அழைப்பு

படுக்கைக்கு அழைப்பு

அவ்வப்போது அரசியல் சார்ந்த கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார் ஸ்ரீரெட்டி. அண்மையில் பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மாவை காதலிப்பதாக கூறிய ஸ்ரீரெட்டி அவரை பகிரங்கமாக படுக்கைக்கு அழைத்திருந்தார். ஏற்கனவே பல முறை ராம்கோபால் குறித்து தனது ஃபேஸ் புக் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.

ஃபாரின் பாய் பிரன்ட்

ஃபாரின் பாய் பிரன்ட்

இந்நிலையில் உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் குறித்து கருத்து பதிவிட்டிருக்கிறார் ஸ்ரீரெட்டி. அதாவது, அதிர்ஷ்டவசமாக எனக்கு ஃபாரின் பாய் ஃபிரன்ட் இல்லை. கொரோனாவில் இருந்து தப்பித்து விட்டேன் என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள், ஃபாரின் பாய் பிரன்ட் இருப்பதால் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குவதில்லை.. இருந்தாலும் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் என பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X