நோயாளி மாதிரி நடந்துக்குங்க.. கொரோனாவை பரப்பிய பாடகி கனிகாவை வெளுத்து வாங்கிய மருத்துவமனை நிர்வாகம்!

சென்னை: மருத்துவமனையில் தான் பெரிய ஸ்டார் என ஓவர் சீன் போட்டு வரும் பாடகி கனிகா கபூரை மருத்துவமனை நிர்வாகம் விளாசி தள்ளியிருக்கிறது.

Recommended Video

Singer Kanika Kapoor tested Positive

பிரபல பாலிவுட் பாடகியான கனிகா கபூர், லண்டனில் கடந்த மாதம் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து கடந்த 9ஆம் தேதி இந்தியா வந்த அவர், விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இருந்து எஸ்கேப்பானார்.

தொடர்ந்து மும்பையில் உள்ள தனது வீட்டில் இருந்த கனிகா கபூர் கடந்த 11 ஆம் தேதி விமானம் மூலம் சொந்த ஊரான லக்னோவுக்கு சென்றுள்ளார். மார்ச் 15ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார் கனிகா கபூர்.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

இந்த பார்ட்டியில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலர் பங்கேற்றனர். இந்நிலையில் 16ஆம் தேதி கனிகாவுக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியானது. இதனால் அந்த பார்ட்டியில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என அஞ்சப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

பெரும் பேசு பொருள்

பெரும் பேசு பொருள்

பாஜக மூத்த தலைவரான வசுந்தரா ராஜே, அவரது மகனும் எம்.பி.யுமான துஷ்யந்த், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன், பாஜக எம்பி அனுபிரியா பட்டேல் ஆகியோர் கனிகா கபூருடன் நெருக்கமாக இருந்ததால் விஷயம் பூதாகரமானது.அதில் லோக்சபா எம்.பி.யுமான துஷ்யந்த் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தால் இந்த விஷயம் இந்திய அளவில் பெரும் பேசு பொருளானது.

பெரிய ஸ்டார்

பெரிய ஸ்டார்

உடனடியாக குடியரசுத் தலைவருக்கு சோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியானது. இதனை தொடர்ந்து கனிகா கபூர் லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனிகா கபூர் மருத்துவமனையில் தான் ஒரு பெரிய ஸ்டார் என ஓவராக சீன் போட்டு வரும் தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவர்கள் எரிச்சல்

மருத்துவர்கள் எரிச்சல்

ஏற்கனவே கொரோனா வைரஸ் சோதனை செய்துக்கொள்ளாமல் பலருக்கும் பரப்பியதால் அவர் மீதே நாடே செம கோபத்தில் உள்ளது. இந்நிலையில் அவர் தான் பெரிய செலிபிரிட்டி என காட்டி கொள்வது அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களை எரிச்சலடைய செய்துள்ளது.

மருத்துவமனை அறிக்கை

மருத்துவமனை அறிக்கை

மேலும் மருத்துவமனையில் தனக்கு கொடுக்கப்பட்ட அறையில் வசதிகள் போதவில்லை, தூசியாக உள்ளது கொசு தொல்லை தாங்க முடியவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் கனிகா கபூர். இந்நிலையில் கனிகா சிகிச்சை பெற்று வரும் சஞ்சய் காந்தி மருத்துவ அறிவியல் மருத்துவமனை இயக்குநர் ஆர்.கே.திமான், பாடகி கனிகா விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பெரிய நட்சத்திரம்

பெரிய நட்சத்திரம்

அதில் தெரிவித்திருப்பதாவது "மருத்துவமனையில் உள்ள சிறப்பான வசதிகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர் நோயாளியாக நடந்து கொள்ள வேண்டு, மருத்துவமனையில் ஒரு பெரிய நட்சத்திரம் என்பதற்கான குழந்தைத் தன பிடிவாதங்களையும் ஆத்திரங்களையும் இங்கு காட்டக்கூடாது.
அவருக்கு தனியறை அதில் ஏசி வசதி, டிவி, தனி கழிவறை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

முதலில் அவர் நோயாளியாக ஒத்துழைக்க வேண்டும். அவர் மீது மிகுந்த அக்கறையுடன் சிகிச்சை அளித்து வருகிறோம், அவர் நோயாளி போல் நடந்து கொள்ள வேண்டும், ஸ்டார் போன்று அல்ல. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை மறைத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற கனிகா மீது லக்னோ போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X