செம சிரிப்பு..முடியலடா சாமி.. பூமருக்கு இதுதான் அர்த்தமா? ராம்கி சொன்ன அட்டகாசமான விளக்கம்!

சென்னை: கடந்த சில ஆண்டுகளாகவே இளைஞர்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக 2கே கிட்ஸ் மத்தியில் ஒரு சொல்லாடல் புழக்கத்தில் இருக்கின்றது என்றால், அது, பூமர், பூமர் அங்கிள், பூமர் ஆண்ட்டி என்பதுதான். குறிப்பாக யாராவது அறிவுரை கூறினால், உடனே அவரை பூமர் என்கின்றார்கள். அதேநேரத்தில் நாங்கெல்லாம் அந்த காலத்தில் எப்படி இருந்தோம் தெரியுமா என பேசத் தொடங்கினால் அவர்களையும், உடனே பூமர் எனக் கூறிவிடுகின்றார்கள். இப்படியான நிலையில் நடிகர் ராம்கி பூமர் என்றால் என்ன? பூமர் என்பது யார்? என்பது குறித்து தெரிவித்துள்ள விளக்கம் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

லக்கி பாஸ்கர் படம் வந்ததுதான் வந்தது, எல்லோரும் ராம்கி நடித்த ஆண்டனி கதாபாத்திரத்தைப்போல் ஒரு பிசினஸ் பார்ட்னர் வேண்டும் என இணையத்தில் மீம்களை போட்டுத் தள்ளிக்கொண்டும், ராம்கி கதாபாத்திரத்தைக் கொண்டாடிக் கொண்டும் உள்ளனர். அதிலும் குறிப்பாக, நடிகர் ராம்கிக்கு இந்தப் படம் ஒரு கம்பேக் படமாகவே அமைந்துவிட்டது.

lucky baskhar ramki

லக்கி பாஸ்கர் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி பெரும் வெற்றிப் படமாக மாறியது. படத்தில் துல்கர் சல்மான், ராம்கி, மீனாட்சி சௌத்ரி என பலரும் நடித்திருந்தனர். படத்தின் திரைக்கதை அட்டகாசமாக இருந்ததால், ரசிகர்கள் படத்தினை பெரும் வெற்றிப் படமாக மாற்றினர். படம் பாக்ஸ் ஆபிஸில் கிட்டத்தட்ட 130 கோடிகளுக்கு மேல் வசூலித்து வெற்றிப் படமாக உருவெடுத்தது.

ராம்கி: இந்நிலையில் நடிகர் ராம்கி கொடுத்த பேட்டி ஒன்றில் சமீப ஆண்டுகளாக இளைஞர்கள் மத்தியில் புழக்கத்தில் இருக்கும், பூமர் என்ற சொல்லாடல் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதில், " பூமர் என்பது, கடந்த 1946 ஆண்டுகளில், உலகம் முழுவதும் போர் எதுவும் இல்லாமல், அமைதியாக இருந்தது. இதனால் பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு வீட்டில் இருப்பது மட்டும்தான்.

lucky baskhar ramki

பூமர்: 1946 முதல் 1964 வரையிலான அந்தக் காலகட்டத்தில், அனைவரும் குழந்தைகளை அதிகமாக பெற்றுக்கொண்டனர். அதைத்தான் பேபி பூம் எனக் கூறினார்கள். அந்தக் காலகட்டத்தில் பிறந்தவர்களைத்தான் பூமர் என அழைப்பார்கள். ஆனால் அவையெல்லாம் இன்று உள்ள 2கே கிட்ஸ்களுக்கும், ஜென்களுக்கும் தெரிவதில்லை. இவர்களுக்குப் பின்னர்தன், ஆல்ஃபா, பீட்டா எல்லாம் வருவார்கள்.

உண்மை: இவர்கள் நாளை 2கே கிட்ஸ்களை பூமர் எனக் கூறுவார்கள்” எனக் கூறினார். இவரது இந்த விளக்கம் பலருக்கும் சிரிப்பினை வரவழைத்துள்ளது. ராம்கி சொன்ன விதம் சிரிப்பினை வரவழைத்தாலும், அவர் சொன்னதுதான் உண்மை என்பது பலருக்கும் தெரியாதது. அதேநேரத்தில் ராம்கியின் இந்தப் பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

lucky baskhar ramki

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X