Lucky Baskhar: ஓடிடியில் சக்கைப்போடு போடும் லக்கி பாஸ்கர்.. தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி லாபமா?
சென்னை: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் தமிழ்நாட்டில் எந்தளவுக்கு லாபத்தை அள்ளியிருக்கிறது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி நடித்த லக்கி பாஸ்கர் முதலில் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
விஜய்யின் கோட் படத்துடன் துல்கர் சல்மான் மோதப் போகிறாரா? என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், மேலும், சில காரணங்களுக்காக லக்கி பாஸ்கர் ரிலீஸ் தீபாவளிக்கு சென்றது.

தீபாவளிக்கும் இந்த படத்துக்குப் பெரும் போட்டி நிலவியது. தமிழ்நாட்டில் அமரன், பிரதர் மற்றும் ப்ளடி பெக்கர் என 3 படங்கள் மோதின. இதில், பிரதர் மற்றும் ப்ளடி பெக்கர் படங்களுக்கு தமிழ்நாட்டில் ஒதுக்கப்பட்ட தியேட்டர்களை ஓவர் நைட்டில் லக்கி பாஸ்கர் பல இடங்களில் பிடித்து வெற்றிநடை போட்டது.
பான் இந்தியா ஹிட் அடிக்கல: துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படம் பான் இந்தியா ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தளவுக்கு மிகப்பெரிய வசூலை லக்கி பாஸ்கர் குவிக்கவில்லை. அதிகபட்சமாக 107 கோடி ரூபாய் வசூலை மட்டுமே இந்த படம் அள்ளியது. ஆனால், படம் பார்த்த பலரும் இந்த ஆண்டு வெளியான தரமான படங்களில் லக்கி பாஸ்கர் படம் டாப் 5 இடங்களில் இருக்கும் எனக் கூறி வருகின்றனர்.
நெட்பிளிக்ஸில் ரிலீஸ்: தீபாவளியை முன்னிட்டு வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளா என தென்னிந்தியாவில் கணிசமான வெற்றியைப் பெற்றன. சுமார் 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான லக்கி பாஸ்கர் 107 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனமும் பெரிய தொகை கொடுத்து படத்தை வாங்கியுள்ளதாக கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் நல்ல லாபம்: சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் தமிழ்நாட்டில் 50 கோடிக்கும் அதிகமான ஷேர் பெற்ற நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படம் 7 கோடி வரை ஷேர் பெற்றிருப்பதாகவும், இங்கேயே 15 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்து துல்கர் சல்மான் நடிக்கும் படத்துக்கு இன்னமும் பெரிய மார்க்கெட் உருவாகும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











