நான் ஷூட்டிங்கிற்கு ஒழுங்கா வரலையா.. கேள்வி கேட்டா தப்பா.. யோகி பாபு ஆதங்கம்!

சென்னை: நான் ஷூட்டிங்கிற்கு ஒழுங்கா வரலைனு சொல்றாங்க, ஷூட்டிங்கிற்கு வராமல் எங்கே போவேன் என்று லக்கிமேன் விழாவில் நடிகர் யோகி பாபு ஆதங்கத்துடன் பேசி உள்ளார்.

மண்டேலா, பொம்மை நாயகி, யானை முகத்தான் உள்ளிட்ட படங்களின் வரிசையில் யோகிபாபு நாயகனாக நடித்துள்ள படம் லக்கி மேன்.

இதில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Lucky Man press meet Yogi Babu speech video trending on social media

லக்கி மேன்: வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையே பார்க்காத ஒரு மனிதனுக்கு பெரும் அதிர்ஷ்டம் கிடைத்தால் என்ன நடக்கும் என்பது தான் படத்தின் கதை, இப்படத்தில், ஷான் ரால்டனின் இசையில் பின்னணியில் வரும் பாடல் மனதை கவரும் வகையில் உள்ளது. இப்படத்தை பாலாஜி வேணுகோபால் இயக்கி உள்ளார்.

அனைவருக்கும் நன்றி: வரும் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் யோகிபாபு, இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி, என்னுடைய வாழ்வை திரும்பி பார்ப்பது போன்றதொரு கதை தான் லக்கிமேன்.

ஷூட்டிங்கிற்கு வரலையா: நான் ஷூட்டிங் சரியாக வரமாட்டேன் என்று சொல்கிறார்கள். ஷூட்டிங்கிற்கு வராமல் நான் கொத்தனார் வேலைக்கா போகிறேன், சரியான தேதி கொடுத்தால் அந்த தேதியில் சரியாக வந்துவிடுவேன். ஆனால், உங்களுக்கு இருக்கும் பணப்பிரச்சனையால் தேதியை மாற்றி வைத்துவிட்டு யோகி பாபு வரவில்லை என்று சொன்னால் எப்படி.

பிஸ்னஸ் பண்றீங்க: அதே போல படத்தில்,நான்கு, ஐந்து சீன் என்னை வைத்து எடுத்து விட்டு என் போஸ்டர் போட்டு ஏன் பிஸ்னஸ் பண்றீங்க எனக் கேட்டேன். அது ரசிகர்களையும் விநியோகஸ்தர்களையும் ஏமாற்றுவது போல தானே? அதை நான் கேட்டதால் தான் அனைவருக்கும் பிரச்சினை. என்னைப் பற்றி வரும் செய்திகள் எல்லாம் பொய்.

கஷ்டத்தை கேட்டு நடிப்பேன்: நான் கதையைக் கேட்டு படம் பண்ணுவதை விட அவர்களின் கஷ்டத்தைக் கேட்டுதான் படத்தில் நடிக்கிறேன். இதனால், பல இயக்குநர் அப்போது உருவாகி இருக்கிறார்கள். இதை தொடர்ந்து எப்போதும் செய்து கொண்டே இருப்பேன். லக்கி மேன் நன்றாக வந்து இருக்கிறது. படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்குமே என் நன்றி என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X