நயன்தாரா உடன் நெற்றிக்கண் படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர்

சென்னை: மிலந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் நெற்றிக்கண் திரைப்படத்தில், ஹாலிவுட் நடிகர் லுக் கென்னி நடிக்கப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து, நேற்று இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. முழுக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாகும் இப்படம் நயன்தாரா நடிக்கும் 65ஆவது படமாகும்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் முதல் படம் மனசினக்கரே எனும் மலையாள படம் ஆகும். தமிழில் சரத்குமார் நடித்த ஐயா படம் மூலம் அறிமுகமான நயன்தாரா, சந்திரமுகியில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து மிக முக்கிய கதாநாயகியாக உருவாகத் தொடங்கினார்.

Luke Kenny Acts in Netrikann starring Nayanthara

நயன்தாரா அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகையாக உயர்ந்தார். பல படங்களில் கதாநாயகியாக மட்டும் நடித்து வந்த நயன்தாரா அஜித்தின் பில்லா படம் மூலம் ஆக்சன் கதாநாயகி அவதாரம் எடுத்தார்.

தற்போது தமிழில் கடைசியாக மிஸ்டர்.லோக்கல் மற்றும் சைரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் தனி நடிகையாக நடித்த அறம், கோலமாவு கோகிலா போன்ற படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யின் பிகில் படத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் தர்பார் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நயன்தாராவின் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவன், தற்போது நயன்தாராவை முக்கிய கதாபாத்திரமாக வைத்து நெற்றிக்கண் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். அவரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என்று பெயர் வைத்துள்ளார். முழுக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாகும் இப்படம் நயன்தாரா நடிக்கும் 65ஆவது படமாகும்.

நெற்றிக்கண் படத்தை இயக்கி வருகிறார் மிலந்த் ராவ். இவர் இதற்கு முன் அவள் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில் சித்தார்த் மற்றும் ஆன்ட்ரியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். தற்போது இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்து இரண்டாம் ஷெட்யூல் நேற்று துவங்கியுள்ளது.

இந்த படத்தில் சேக்ரெட் கேம் (sacred games) இல் நடித்த லுக் கென்னி (Luke Kenny) நடிப்பதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனின் 17ஆவது படத்தில் பிஸியாக உள்ளார். மேலும், நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் ஒரு ஆந்த்தாலஜி படத்திலும் ஒரு பாகத்தை இயக்க உள்ளார்.

ஆந்த்தாலாஜி படம் எனப்படுவது ஒரு படத்திற்குள் 4 தொடர்பற்ற படங்கள் இடம் பெறுவதே ஆகும். அந்த படத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், கவுதம் வாசுதேவ மேனன், சுதா கொங்கரா இணைந்து படங்களை இயக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X