பராசக்தி நல்லா இருக்குதுனு சொன்ன லுங்கி பாய்ஸ்.. கமெண்ட் செக்‌ஷனில் கதறிய விஜய் ரசிகர்களுக்கு விளாசல்

சென்னை: பராசக்தி படம் நேற்று அதாவது ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை சுதா கொங்கரா இயக்க சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் சமூக வலைதளத்தில் இணையவாசிகள் மத்தியில் பிரபலமானவர்கள் லுங்கி பாய்ஸ் டீம். அவர்களின் நகைச்சுவையான வீடியோக்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படி இருக்கையில் பராசக்தி படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக உள்ளது என்று வீடியோ பதிவிட்டு, பகிர்ந்துள்ளார்கள். இவர்களின் இந்த வீடியோவுக்கு கமெண்ட் செக்‌ஷனில் விஜய் ரசிகர்கள் மிகவும் மோசமான கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர். குறிப்பாக விஜய்க்கு துரோகம் செய்துவிட்டாய், உங்களை அன்ஃபாலோ செய்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்கள். இது மட்டும் இல்லாமல் மோசமாகவும் கமெண்ட் போட்டுள்ளார்கள்.

Lungi Boys Team Slams Vijay Fans Who Commented Badly After Their Parasakthi Review

பதிலடி: இப்படி இருக்கும்போது, விஜய் ரசிகர்களின் இந்த விமர்சனத்திற்கு லுங்கி பாய்ஸ் பதில் கொடுத்து வீடியோ பகிர்ந்துள்ளார்கள். அதாவது, " நாங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவானவர்கள் கிடையாது. இன்றைக்கு பராசக்தி படம் வெளியானது, படத்திற்கு போனோம். படம் நன்றாக இருந்தது நன்றாக உள்ளது என்று கூறுகிறோம். நாளை ஜன நாயகன் படம் வந்தாலும் படத்தை பார்க்க தியேட்டருக்கு போவோம், இதேபோல ஜன நாயகன் படத்திற்கும் வீடியோ போடுவோம். ஆனால், இதற்காக எங்களை விஜயின் துரோகி என்றும் எங்களை அன்ஃபாலோ செய்கிறோம் என்று கூறுகிறீர்கள். இப்படி புரிதல் இல்லாமல் இருப்பவர்கள் எங்களை அன்ஃபாலோ செய்வது என்றால் செய்து கொள்ளுங்கள்.

சிரித்துக் கொண்டுதான் இருக்கோம்: நீங்கள் கமெண்ட் செக்‌ஷனில் எங்களைத் திட்டுவதைப் பார்த்து நாங்கள் கவலைப்படவில்லை, சிரித்துக் கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவானவர்கள் கிடையாது, எதிரானவர்களும் கிடையாது" என்று பேசி வீடியோ பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையவாசிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல் பராசக்தி படத்தைப் பார்த்த விஜய் ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டியது தொடர்பான வீடியோக்களையும் பார்க்க முடிந்தது.

Lungi Boys Team Slams Vijay Fans Who Commented Badly After Their Parasakthi Review

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X