கடைசி வரைக்கும் அந்த விடாமுயற்சி அப்டேட் வராதா?.. கேப்டன் மில்லர் அப்டேட்டால் காண்டான அஜித் ஃபேன்ஸ்!
சென்னை: லைகா தரப்பில் இருந்து எந்தவொரு ட்வீட் போட்டாலும் உடனடியாக ஆஜராகி வேதனைப்படுவது அஜித் ரசிகர்களாகத்தான் உள்ளனர்.
பொன்னியின் செல்வன் 2, சந்திரமுகி 2. இந்தியன் 2, தலைவர் 171, லால் சலாம், விஜய் மகன் சஞ்சயின் பட அறிவிப்பு வரை ஏகப்பட்ட அப்டேட்களை லைகா நிறுவனம் கடந்த சில மாதங்களாக வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது இன்னொரு அறிவிப்பு வெளியாக உடனே அதை உற்றுநோக்கிய அஜித் ரசிகர்களுக்கு தனுஷின் கேப்டன் மில்லர் பட அப்டேட் வெளியாகி காண்டாக்கி உள்ளது.
கேப்டன் மில்லர் அப்டேட்: ராக்கி, சாணிக்காயிதம் உள்ளிட்ட வித்தியாசப் படங்களை கொடுத்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் டிசம்பர் 15ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தின் தாறுமாறான அப்டேட்டை தான் தற்போது லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
லைகா கையில்: தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை ஓவர்சீஸ் மார்க்கெட்டில் மிகப்பெரிய அளவிற்கு கொண்டு செல்லவேண்டும் என கேப்டன் மில்லர் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்த நிலையில், அதை தற்போது லைகா வசம் ஒப்படைத்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி தனுஷ் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.
முன்னதாக அஜித்தின் துணிவு படத்தின் ஓவர்சீஸ் உரிமத்தை பெற்ற லைகா நிறுவனம் மிகப்பெரிய அளவில் அந்த படத்தை கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் படமும் வெளிநாடுகளில் வசூல் வேட்டையை வேறலெவலில் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அஜித் ரசிகர்கள் அப்செட்: விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் இந்த தேதியில் இருந்து ஆரம்பமாகுது என்கிற ஒரு சின்ன அப்டேட் வந்தாலும் அஜித் ரசிகர்கள் வேறமாறி டிரெண்டை செய்து தெறிக்கவிடுவார்கள். ஆனால், மீண்டும் மற்ற நடிகர்களின் அப்டேட் வெளியான நிலையில், லேசாக அப்செட் ஆகி உள்ளனர்.
லைகா வெளியிட்ட கேப்டன் மில்லர் ஓவர்சீஸ் அப்டேட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் விடாமுயற்சி அப்டேட் கேட்டு கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











